கடந்த சில நாட்களாகவே சோசியல் மீடியாவில் நடிகர் ரவி மோகன் குடும்ப பிரச்சனை தான் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. ஜெயம் ரவி என்ற தன்னுடைய பெயரை கடந்த வருடத்தில் அதிரடியாக ரவி மோகன் என மாற்றிக் கொண்டார். அதனைப் போலவே அவருடைய குடும்ப பிரச்சனையும் வெளி உலகத்திற்கு தெரிய வந்துள்ளது. ரவி மோகன் தான் காதலித்து திருமணம் செய்த ஆர்த்தியை திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக பரபரப்பான அறிக்கை வெளியிட்டிருந்தார். இதனை தொடர்ந்து விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் ஆர்த்தி தான் விவாகரத்து வழங்கப் போவதில்லை என்றும் தனக்கு ரவி மோகனுடன் சேர்ந்து வாழ விருப்பம் என்றும் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இதனிடையே ரவி மோகன் பாடகி கெனிஷாவுடன் காதலில் இருப்பதாக செய்திகள் வந்தது. ஆனால் இந்த செய்திக்கு இருவருமே மறுப்பு தெரிவித்தனர். இப்படி இருக்கையில் சமீபத்தில் ஐஷரி கணேஷ் மகள் திருமணத்தில் பாடகி கெனிஷாவுடன் ஒரே நிற உடையுடன் ரவி மோகன் வந்திருந்தார். இதனால் இருவரும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்ய போவதாகவும் செய்திகள் பரவியது. இதனைத் தொடர்ந்து ரவி மோகன் இப்போதும் என்னுடைய கணவர் தான் என் குழந்தைகளுக்கு அவர் தான் அப்பா என்று ஒரு நீண்ட அறிக்கையை ஆர்த்தி வெளியிட்டு இருந்தார்.

அதனைப் போலவே ரவி மோகனும் நேற்று நான்கு பக்க அளவுக்கு ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டிருந்தார். அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த வார்த்தைகள் அனைத்தும் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இப்படியான நிலையில் இவர்களுடைய விவகாரம் தொடர்பாக பாடகி சுசித்ரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ஜெயம் ரவியும் கெனிஷாவும் என்ன தப்பு பண்ணாங்க. தமிழ் சினிமா உலகில் மற்றவர்கள் செய்யாத தவறையா ஜெயம் ரவி செய்துவிட்டார்? எல்லோரும் கமுக்கமா செய்து கொண்டிருக்கிறார்கள்.

முதலில் இவர் தவறாக தொடங்கினார் தற்போது எல்லாம் சரியாகத்தானே போய்க்கொண்டு இருக்கிறது. அந்தப் பொண்ணுக்கு எந்த அளவுக்கு அங்கீகாரம் கொடுக்கின்றார். அனைத்து பெண்களுமே அப்படித்தானே நடத்தப்பட வேண்டும் என்று நினைப்பீர்கள். கெனிஷாவை நினைத்து மகிழ்ச்சி அடையுங்கள். இத்தனை வருடங்கள் ஒர்க் ஆகாத திருமணம் குறித்து ஆர்த்தி அழுது கொண்டே இருக்கிறார் என்பதற்காக அவர் யார் என்றே தெரியாமல் நீங்கள் அவருக்கு ஆதரவாக நிற்கிறீர்கள். அவருடைய இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தவிர உங்களுக்கு அவரைப் பற்றி வேறு என்ன தெரியும். அவருடைய புகைப்படத்தை மட்டும் பார்த்து அவருக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கிறீர்கள் என்றால் நீங்கள் தான் அவரைப் பார்த்து ஜொள்ளு விடுகிறீர்கள் என்று அர்த்தம்.

கெனிஷா என்ன தவறு செய்தார்? யாரும் பகிராத மியூசிக் வீடியோக்களையா அவர் பகிர்ந்து விட்டார். தற்போது மட்டும் அவை உங்களுக்கு உறுத்துவது ஏன்? ஆண்ட்ரியா மேடையில் அணியும் ஆடைகளைப் போலத்தான் இவரும் வீடியோக்களில் அணிந்துள்ளார். வித்யா பாடும் பாடல்களைப் போலத்தான் இவரும் பாடுகின்றார். உடனே ஜெயம் ரவியையும் கெனிஷாவின் தொழிலையும் கேவலமாக சித்தரிக்கிறீர்களே. உங்களுக்கு எல்லாம் அசிங்கமாவே இல்லையா? ஜெயம் ரவி தன்னுடைய பெயரிலிருந்து ஜெயம் என்பதை எடுக்காமல் இருந்திருக்கலாம். ஜெயம் என்று உங்கள் பெயருடன் இருப்பது என்பதில் எந்த விதமான கிரிஞ்சும் கிடையாது என்று சுசித்ரா பேசியுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்தப் பதிவைக் காண்க
