தன்னுடைய தனித்துவமான குரலாலும் பாடல்களாலும் தமிழ்த் திரையுலகில் தனக்கென ஒரு முத்திரையை பதித்தவர் தான் பாடகி சுசித்ரா. பின்னணி பாடுகையாக மட்டுமல்லாமல் வானொலி அறிவிப்பாளராகவும், தொகுப்பாளர் மற்றும் டப்பிங் கலைஞர் என பன்முக திறமையை கொண்டவராக பலம் வந்தவர். சுச்சி லீக்ஸ் விவகாரத்திற்குப் பிறகு அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கிவரும் இவர் ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன். அவர் என்னை ஏமாற்றிவிட்டார் என்று இன்ஸ்டாகிராமில் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சுச்சி லீக்ஸ் என்ற விவகாரம் என்னுடைய வாழ்க்கையில் வந்த பிறகு இதைவிட ஒரு பெரிய விஷயம் நடக்காது என நான் இருந்தேன்.
ஆனால் அதைவிட ஒரு பெரிய விஷயம் நடந்தது. கடந்த இரண்டு வருடங்களாக நான் ஒருவரை காதலித்து வருகிறேன். அவரின் பெயர் சண்முகராஜ். என்னுடைய 48 வயதில் கண்டாவி புடிச்ச ஒரு ரிலேஷன்ஷிப்புக்குள் நான் போய் மாட்டிக்கொண்டேன். என் வாழ்க்கையில் இது எல்லாம் நடக்காது என நினைத்து இருந்தேனோ அந்த ரெண்டு வருஷத்தில் அது எல்லாம் என்னோட வாழ்க்கையில் நடந்து விட்டது. அவரை நான் திருமணம் செய்து விட்டேன் என்று சொல்லும் அளவிற்கு வந்துவிட்டேன். என் வாழ்க்கையை காப்பாற்றுவது போல அவர் என் வாழ்க்கைக்குள் நுழைந்தார். தனுஷ் உன்னுடைய வாழ்க்கையை கெடுத்துவிட்டான்.,
கார்த்திக் ராஜாவால் உன் வாழ்க்கையே போய்விட்டது,நானும் வாழ்க்கையில் என் மனைவி மற்றும் குழந்தைகளால் பெரிய கஷ்டப்பட்டு விட்டேன்., இனிமேல் உனக்கு நான் எனக்கு நீ என இருப்போம் என்று பேசி என் வாழ்க்கைக்குள் நுழைந்தார். நானும் அனைத்தையும் நம்பி காதலிக்க ஆரம்பித்து என்னுடைய பணத்தை எல்லாம் அவரிடம் கொடுத்தேன். ஆனால் தினமும் என்னை அடித்து உதைத்து மிதித்து கொடுமைப்படுத்தினார். அவன் முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டேன் என்றுதான் என்னிடம் சொன்னான்.
ஆனால் அவரின் மனைவி என் வீட்டுக்கு வந்து என் கணவனை என்னிடம் கொடுத்துவிடு என்று கெஞ்சுகிறார். நான் எப்போதுமே பெரிய அப்பாடக்கர் போல பேசிக் கொண்டிருப்பேன். ஆனால் அவனை உண்மையாக காதலித்ததால் என்னுடைய வாழ்க்கைக்காக நான் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்து அனைத்து பணத்தையும் அவன் பறித்து விட்டான். அவன் எவ்வளவு பணத்தை என்னிடம் இருந்து பறித்துக் கொண்டான் என்று நான் சொன்னால் நிச்சயமாக உங்களுக்கே தலை சுற்றிவிடும்.
நான் சண்முகராஜா மீது வழக்கு போட்டு உள்ளேன். அவனிடம் ஒரு பைசாவை கூட விட்டு வைக்க மாட்டேன். கடைசி பைசாவை கூட பிடுங்கி விடுவேன். அவன் மீது ஆறு வழக்கு போடப்போகிறேன். சென்னையில் உள்ள என் வீட்டில் அவன், முதல் மனைவி குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறான். இன்னும் இரண்டு வாரத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. இதனால் நீங்கள் இனி என்னை அடிக்கடி நீதிமன்றத்தில் சந்திக்கலாம் என்று சுஜித்ரா வெளியிட்டுள்ள வீடியோ தற்போது பரபரப்பை கிளப்பியுள்ளது.
தமிழக அரசியலில் தற்போதைய சூழல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவைச் சேர்ந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் (MLA) தங்கள் பதவிகளை…
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள கலிக்கநாயக்கன்பாளையம், சிபிசி கார்டன் பகுதியில் காதலை மறுத்த இளம்பெண்ணின் வீட்டின் மீது மண்ணெண்ணெய்…
தமிழ் திரையுலகில் குடும்ப உறவுகளின் உன்னதத்தையும், எமோஷனல் உணர்வுகளையும் தத்ரூபமாகப் படம்பிடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் இயக்குநர்…
அதிமுகவின் உட்கட்சி அரசியல் களம் தற்போது அதிரடி திருப்பங்களுடன் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. எடப்பாடி பழனிசாமி (EPS) மற்றும் எஸ்பி…
தமிழக அரசியல் களம் அடுத்தடுத்து பல்வேறு அதிரடி திருப்பங்களைச் சந்தித்து வரும் நிலையில், அதிமுக-வைச் சேர்ந்த மரகதம் குமரவேல், சத்யபாமா…
2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தந்த அதிர்ச்சியிலிருந்தே இன்னும் மீளாத அதிமுகவிற்கு, அடுத்தடுத்து விழும் அடிகள் அதன் அஸ்திவாரத்தையே அசைத்துப்…