போயும் போயும் ஸ்கூல்ல இப்படியா?.. கொஞ்சம் கூட அசிங்கமா இல்லையா?.. ஸ்டாலினை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய வானதி சீனிவாசன்..!

Spread the love

பொள்ளாச்சி அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மூன்று மாணவிகள் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தனர். அந்த வீடியோவில் பள்ளியில் உள்ள இசை ஆசிரியர் மற்றும் தாவரவியல் ஆசிரியர் தங்களிடம் “பேட் டச்” செய்ததாக குற்றம் சாட்டியிருந்தனர். மேலும் இதைத்தொடர்ந்து மகளிர் போலீசார் குற்றம் சாட்டப்பட்ட பள்ளிக்குச் சென்று 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். இதை அடுத்து இசை ஆசிரியர் செல்வராஜ், தாவரவியல் ஆசிரியர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

பள்ளி மாணவிகளுக்கு பள்ளிக்கூடத்திலேயே பாதுகாப்பில்லை என்பதை தமிழக அரசு பெரும் அவமானமாக கருத வேண்டும் என வானதி ஸ்ரீனிவாசன் கூறியுள்ளார். இது குறித்து வானதி ஸ்ரீனிவாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் 1300 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் படித்து வரும் நிலையில் இங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் சிலர் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளன. இது தொடர்பாக மாணவிகள் வெளியிட்ட வீடியோ அதிர்ச்சி அளிக்கிறது. பள்ளியில் படிக்கும் மாணவிகளின் ஆசிரியர் என்பவர் பாடம் கற்பிக்கும் குரு மட்டுமல்ல, ஒரு தந்தையாக, சகோதரனாக இருந்து வாழ்வில் வழிகாட்ட வேண்டியவர். ஆசிரியர்களை நம்பித்தான் தங்கள் பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகின்றனர். இத்தகைய பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். பள்ளி மாணவிகளுக்கு பள்ளிக்கூடத்திலேயே பாதுகாப்பு இல்லை என்பதை தமிழ்நாடு அரசு பெரு அவமானமாக கருத வேண்டும். பாலியல் சீண்டல்கள் நடந்தது அரசு மேல்நிலைப் பள்ளியில் என்பதால் மாணவிகளின் பாதுகாப்பிற்கு தமிழக அரசும், பள்ளி கல்வித்துறையும் பொறுப்பேற்க வேண்டும். எனவே கடமையை உணர்ந்து பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என வானதி ஸ்ரீனிவாசன் கூறியுள்ளார்.

Srimathi

Recent Posts

“4 மாதத்தில் 24 கோடி அவுட்!.. ஓய்வுபெற்ற ஆசிரியருக்கு நேர்ந்த பயங்கரம்.. இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி அம்பலம்.. அதிரவைக்கும் பின்னணி”..!!!

பெங்களூருவில் 74 வயதான ஓய்வுபெற்ற பெண் ஆசிரியை லட்சுமி ராமமூர்த்தி என்பவரை, இணையவழி குற்றவாளிகள் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள்…

9 minutes ago

BREAKING: மேலும் சில MLA-க்கள் ராஜினாமா..? அரசியலில் திடீர் திருப்பம்…!!

அதிமுகவைச் சேர்ந்த 3 சட்டமன்ற உறுப்பினர்கள் (MLA-க்கள்) தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளதாக இந்த செய்தி கூறுகிறது. அவ்வாறு ராஜினாமா…

17 minutes ago

அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா.. 100 சதவீதம் குதிரை பேரம்.. தவெக-வை வெளுத்து வாங்கிய இன்பத்துரை…!!

தமிழக சட்டமன்றத்தில் தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் அல்லது பெரும்பான்மை நிரூபிக்கும் வாக்கெடுப்பின் போது,…

19 minutes ago

அதிமுகவிற்கு அடுத்த அதிரடி ஷாக்..! 3 எம்.எல்.ஏ.க்கள் திடீர் ராஜினாமா… அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுடன் ரகசிய சந்திப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அ.தி.மு.க.வைச் சேர்ந்த மூன்று முக்கிய சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்.எல்.ஏ.க்கள்) தங்களது பதவிகளை…

36 minutes ago

பழிக்கு பழி.. அரசு பள்ளி வாசலில் நடந்த பயங்கரம்… மதுராந்தகத்தில் ஓட ஓட வெட்டப்பட்ட வாலிபர்… பின்னணியில் இருக்கும் பகீர் காரணம்….!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த நேத்தப்பாக்கம் கிராமத்தில் இரு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட முந்தைய பகை, இன்று ஒரு கொடூரமான…

1 மணத்தியாலம் ago

மூக்கில் சிறிய சதை வளர்ச்சி… நள்ளிரவில் நடந்த கொடூரம்! 21 வயது நர்சிங் மாணவிக்கு நேர்ந்த சோகம்… அரசு கொடுத்த இலவச வீடு மற்றும் வேலை… நெகிழ்ந்த சகோதரி….!

திருச்சி அரசு மருத்துவமனையில் மூக்கில் சதை வளர்ச்சிக்கான சிகிச்சையின் போது நர்சிங் மாணவி சீதாலட்சுமி உயிரிழந்த சம்பவம், மருத்துவ வட்டாரத்திலும்…

1 மணத்தியாலம் ago