எஸ்பிபி அவருடைய குரலில் முதன் முதலில் பாடிய தமிழ் பாடல் ஆயிரம் நிலவே வா என்ற பாடல் தான். எம்ஜிஆரின் அடிமை பெண் படத்திற்காக அவர் இந்த பாடலை பாடினார். ஆனால் இந்த பாடல் உருவானதற்கு பின்னணியில் ஒரு சுவாரஸ்யமான கதையும் உள்ளது. அதாவது ஒரு நாள் ஏவிஎம் ஸ்டூடியோவில் எம்ஜிஆர் தன்னுடைய பட விஷயமாக ஆலோசனைகள் இருந்தபோது அருகே உள்ள செட்டில் தெலுங்கு பட பாடல் கம்போசிங் நடந்து கொண்டிருந்தது.

அதில் எஸ் பி பி பாடி கொண்டிருந்தார். அவரின் குரலைக் கேட்டு மெய் மறந்து போன எம்ஜிஆர் யாருப்பா இவ்வளவு அழகா பாடுவது என்று கேட்டுள்ளார். அவரை நேரில் அழைத்து தனது படத்தில் நீ கண்டிப்பா பாடணும் என்று எம்ஜிஆர் கூறினார். தமிழில் முதல் பாடலை எம்ஜிஆர் பாடல் என்பதால் எஸ்பிபி மிகுந்த சந்தோஷத்தில் இருந்து உள்ளார். ஆல் மறுநாள் அவருக்கு டைபாய்டு காய்ச்சல் வந்ததால் அந்த பாடல் பாட முடியாமல் போனது. இதனால் அவர் சோகத்தில் இருந்து உள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/08/MGR-SPB.jpg)
அப்போது நீ ஒன்றும் கவலைப்பட வேண்டாம் இந்த பாடலை நீ தான் பாட போகிறாய் , உனக்கு உடல்நலம் சரியாகும் வரை காத்திருந்து அதன் ரெக்கார்டிங்கை வைத்துக் கொள்கிறோம் என்று எம்ஜிஆர் சொல்லியுள்ளார். இப்படி எஸ்பிபி இசை பயணத்தை தமிழில் தொடங்கி வைத்த பாடல் தான் எம்ஜிஆரின் அடிமைப்பெண் படத்தில் இடம்பெற்ற ஆயிரம் நிலவே வா பாடல். அவரின் பாடலுக்காக எம்ஜிஆர் சுமார் இரண்டு மாதங்கள் வரை காத்திருந்தே பிறகு ரெக்கார்டு செய்யப்பட்ட இந்த பாடல் இன்றுவரை தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்துள்ளது என்று சொன்னால் மிகை ஆகாது. இதுதான் தன் வாழ்வில் கிடைத்த வரப்பிரசாதம் எனவும் அந்த பாடலை என்றுமே மறக்க முடியாது எனவும் எஸ்பிபி பழைய பேட்டி ஒன்றில் பேச உள்ளார்.
