இந்திய சினிமாவில் முன்னணி பாடகியாக வலம் வருபவர் ஸ்ரேயா கோஷல். ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களை ரசிகர்களுக்கு தந்தவர். பல தேசிய விருதுகளை வென்றவர். தமிழ் மலையாளம் தெலுங்கு இந்தி கன்னடம் என பல மொழிகளில் பல ஆயிரக்கணக்கான பாடல்கள் பாடி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர்.
இந்நிலையில் பாடகி ஸ்ரேயா கோஷல் ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது கூறியதாவது, ஒரு பாடலின் உண்மையான வெற்றி என்பது ரசிகர்கள் தரும் லைக்குகளில் இல்லை. ஒரு கச்சேரியில் அந்த பாடல் ஒலிக்கும் போது ரசிகர்களும் சேர்ந்து பாடுவது தான். ரசிகர்களின் உதடுகள் அந்த பாடலை உச்சரிப்பதுதான். இதுதான் இசைக்கலைஞர்களுக்கு கிடைக்கும் மிகப்பெரிய விருதும் அங்கீகாரமும் ஆகும்.
லைக்குகளை யாரும் எப்போது வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். ஆனால் ரசிகர்களின் மனநிலையை வெல்வதுதான் அந்த பாடலின் உண்மையான வெற்றி. ஒருவர் என்ன மனநிலையில் இருந்தாலும் அந்த மனதை அந்த பாடல் துளைத்து ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அதுதான் அந்த பாடலின் உண்மையான வெற்றி என்று பாடகி ஸ்ரேயா கோஷல் அதில் பேசியிருக்கிறார். இதற்கு ரசிகர்கள் வாவ் சூப்பர் என்று அவரை பாராட்டி வருகின்றனர்.
