#image_title
ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவியின் விவாகரத்திற்கு காரணம் அவரது தாயார் தான் என்று மூத்த பத்திரிக்கையாளரான சபிதா ஜோசப் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இசை மீது சிறு வயது முதலே இருந்த ஆர்வம் காரணமாக பல பாடல்களைப் பாடி பிரபலமானவர் ஜிவி பிரகாஷ். இசையை கற்றுக்கொண்டு இசையமைப்பாளராக அவதாரம் எடுத்த இவரின் அம்மாவும் பாடகியாக வலம் வந்தவர் தான்.
ஜிவி பிரகாஷ் கடந்து 2006 ஆம் ஆண்டு வெளியான வெயில் என்ற திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கினார். முதல் படத்தில் இவரின் இசை மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. பின்னர் ஓரம் போ, கிரீடம், பொல்லாதவன், குசேலன், ஆனந்த தாண்டவம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இசையமைத்து முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கின்றார்.
இசையை தாண்டி பாடகர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவராக வளம் வருகின்றார். இவர் பள்ளி படிக்கும் போது இருந்தே சைந்தவியை காதலித்து வந்த நிலையில் கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடிக்கு அன்வி என்கின்ற மகளும் இருக்கிறார்கள். திருமணமாகி பல வருடங்களுக்குப் பிறகுதான் இவர்களுக்கு குழந்தை பிறந்தது. இந்நிலையில் நாங்கள் பிரியப் போவதாக நேற்று சமூக வலைதள பக்கத்தில் அறிவித்திருந்த நிலையில் பலரும் என்ன காரணம் என்று கேட்டு வருகிறார்கள்.
இது குறித்து மூத்த பத்திரிகையாளரான சபிதா ஜோசப் சில தகவல்களை கூறியிருக்கின்றார். அதாவது சைந்தவியின் தாயாரும் இவர்களின் விவாகரத்துக்கு ஒரு காரணம் என்று கூறலாம். இது குறித்து பேசி உள்ள அவர் ஜிவி பிரகாசும் சைந்தவியும் தொடர்ந்து இரண்டு வருடங்களாகவே சரியாக பேசிக் கொண்டதில்லை. இசையமைப்பாளராக இருந்தபோது இரண்டு பேருக்கும் இடையில் நல்ல புரிதல் இருந்தது.
ஜி.வி பிரகாஷ் நடிகராக மாறிய பின் இவர்களின் உறவுக்குள் சிறிய விரிசல் விட தொடங்கியது. ஜிவி பிரகாஷ் சம்பாதிக்கும் பணத்தை சைந்தவி தன்னுடைய தாய் வழியாக செலவு செய்தார். அதே போல் ஜிவி பிரகாஷ், தமிழ் திராவிட அரசியல் மைண்ட் செட் இருப்பவர். ஆனால் சைந்தவியின் அம்மாவோ சனாதனத்தை சார்ந்தவர். அவருடைய அழுத்தம் காரணமாகத்தான் அமிச்சாவை ஒரு முறை சந்தித்திருந்தார். அது அவருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அதுமட்டுமில்லாமல் ஏ ஆர் ரகுமான் உள்ளிட பலரும் சமாதானம் பேசியும் இரண்டு பேரும் தங்களது விவாகரத்து முடிவில் உறுதியாக இருந்ததாக அவர் தெரிவித்தார்.
சென்னையை அடுத்த கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரண்ராஜ், முத்துமாரியம்மாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், 17 வயது சிறுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை காவல்துறையினர் வெறும் 12…
சிங்கப்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம், அவாஸ் விகாஸ் காலனியைச் சேர்ந்த ஹர்ஷ் பாட்டி என்பவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு…
மும்பை மலார்ட் வெஸ்ட் பகுதியில் இயங்கி வந்த 'டெல்லி ஸ்வீட் & பேல்புரி ஹவுஸ்' உணவகத்தில் மகாராஷ்டிரா உணவு மற்றும்…
ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி விபத்துக்குள்ளானதில், இரண்டு ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச்…