திரையுலகில் பிரபலமான பாடகியாக வலம் வருபவர் நேஹா கக்கர். இவரது பாடல்கள் வெளியான உடனே சமூக வலைதளத்தில் ட்ரெண்டிங் ஆகிவிடுகிறது. இப்போது வெற்றிக்கனியை எட்டி பறித்த நேஹா கக்கர் தனது ஆரம்பகால வாழ்க்கை பயணத்தில் மிகவும் சிரமப்பட்டுள்ளார். நேஹா கக்கர் மிகவும் கஷ்டப்படும் குடும்பத்தில் பிறந்துள்ளார். இவர் நான்கு வயதிலேயே பாட ஆரம்பித்து விட்டார்.
அப்போது பூஜை மற்றும் திருவிழாக்களின் போது நேஹா கக்கர் பாடி வந்தார். இதன் மூலம் ஒரு சிறிய வருமானம் தான் கிடைத்தது. அதை வழக்கமாக வைத்துக்கொண்டு ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்ட நேஹா கக்கர் தனது வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு சென்றார். முக்கியமாக சாமானியர்களை அடையாளம் கண்டு கலைஞராக உருவாக்கும் இந்தியன் ஐடெல் நிகழ்ச்சியில் நேஹா கக்கர் கலந்து கொண்டார். அதில் தனது திறமையை வெளிப்படுத்தினார்.
ஆனால் மக்கள் வாக்களிக்காததால் நிகழ்ச்சியிலிருந்து விரைவில் வெளியேறி விட்டார். சில நாட்களிலேயே அவருக்கு படங்களில் பாடும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு சில ஆண்டுகளிலேயே புகழின் உச்சிக்கு சென்றார் நேஹா கக்கர். அதன்பிறகு தான் வெளியேற்றப்பட்ட நிகழ்ச்சிக்கு நடுவராக ஆனார். நான்கு வயதில் மேடை ஏறி பாடிய நேஹா கக்கர் 36-ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார்.
சினிமா உலகில் உச்சத்தில் இருக்கும் நேஹா சன்னி சன்னி, லண்டன் தும்கடா, காலா சஷ்மா, அன்க் மேரா உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார். இவரிடம் 100 கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் தான் 1.5 மதிப்புள்ள லேண்ட் ரோவர் டிஃபெண்டர் கரை வாங்கினார். இன்று பிறந்தநாள் கொண்டாடும் நேஹாவுக்கு சோசியல் மீடியாவில் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.