இந்தியாவில் தெருநாய் மேலாண்மை குறித்த வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில், நாய்களின் நலனுக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் எந்த முடிவும் எடுக்க வேண்டாம் எனப் பாடகர் மிகா சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாய்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்விற்காகத் தனது சொந்த நிலத்திலிருந்து 10 ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்க அவர் முன்வந்துள்ளார்.
<
Mika Singh humbly appeals to the Hon’ble Supreme Court of India to kindly consider refraining from any actions that may adversely affect the welfare of dogs.
I respectfully submit that I have sufficient land at my disposal and am fully prepared to donate 10 acres of land… pic.twitter.com/oNlqxY5rTZ
— King Mika Singh (@MikaSingh) January 11, 2026
/div>
இந்த நிலத்தில் பயிற்சி பெற்ற பணியாளர்கள் மற்றும் பராமரிப்பாளர்களைக் கொண்டு, தெருநாய்கள் மற்றும் கைவிடப்பட்ட நாய்களுக்கான நவீன தங்குமிடங்கள் மற்றும் மருத்துவ வசதிகளை உருவாக்கலாம் என அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார். நாய்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் இத்தகைய முயற்சிகளுக்குத் தான் முழு ஆதரவு வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் மிகா சிங்கின் இந்தச் செயல் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
