பிரபல பின்னணிப் பாடகர் மனோ, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உட்பட 26,000 பாடல்களைப் பாடியுள்ளார். நாதனூரி கிருஷ்ணமூர்த்தியிடம் கர்நாடக இசை பயிற்சி பெற்ற இவர், ஆரம்பத்தில் மேடை நாடகங்கள் மற்றும் 15 தெலுங்கு படங்களில் நடித்தார். இவரது திறமையை அறிந்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன், இவரை தனது குழுவில் இரண்டரை ஆண்டுகள் இணைத்துக் கொண்டார்.
1984 இல் ‘கற்பூர தீபம்’ திரைப்படத்தில் எஸ்.பி.பி.யுடன் பாடும் அரிய வாய்ப்பைப் பெற்றார். 1992 இல் கமல்ஹாசனுடன் ‘சிங்கார வேலன்’ திரைப்படத்தில் நடித்த பிறகு, மீண்டும் நடிக்கும் எண்ணத்தை விடும்படி இளையராஜா அறிவுறுத்தினார். ‘மீண்டும் நடிக்கச் சென்றால், பாட்டு வாய்ப்பு காத்துக்கொண்டிருக்காது’ என்று அவர் எச்சரித்ததால், மனோ நடிப்பில் இருந்து விலகினார்.
சமீபத்தில் நீண்ட இடைவெளிக்குப் பின் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’ படத்தில் நடித்தார். ஒரு நேர்காணலில், தனது தாயார் இறந்து ஆறு மாதங்கள் ஆன நிலையில், ‘பாட்டுக்கு நான் அடிமை’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தாலாட்டு கேட்காத பேரிங்கு யாரு’ என்ற ‘ரயில் பாட்டை’ பாடியபோது தன்னால் பாட முடியாமல் சிரமப்பட்டதாகவும், உணர்ச்சி வசப்பட்டு அழுததாகவும் மனம் திறந்து பேசியுள்ளார். தன்னால் 2 மணி நேரம் தாமதம் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.
