பிரபல பாடகரான மனோ தமிழ், மலையாளம், பெங்காலி, கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இவருக்கு ஜாகிர் மற்றும் ரபீக் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இரண்டாவது மகனான ரஃபீக் மது போதையில் சிறுவர்களை சரமாரியாக தாக்கிய காட்சிகள் இணையத்தில் வைரலானது. காயமடைந்த சிறுவன் காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் ரபீக் உள்பட ஐந்து பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். போலீசார் விசாரிக்க சென்றபோது சாகிரும், ரபீக்கும் தலைமறைவானது தெரியவந்தது.
இந்த நிலையில் மனோவின் மனைவி பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, நடந்தது என்னன்னா என் பையனோட பிரண்டு வீட்டுக்கு வந்துட்டாங்க. அவங்களுக்கு நாங்க சாப்பாடு கொடுத்தோம். என் பையனோட ஃப்ரெண்ட் போறேன்னு சொல்லிட்டு அவங்க பின்னாடியே என் பையன் போய்ட்டாங்க. நாங்க வெளியே நின்னுட்டு இருந்தோம். அப்போ 4,5 பசங்க வீட்ட பாத்துட்டு இருந்தாங்க. அப்புறம் என் பையன் எதுக்கு எங்க வீட்டை பார்த்துட்டு இருக்கீங்க அப்படின்னு கேட்டாங்க. உடனே அந்த பசங்க கெட்ட வார்த்தை பேசினாங்க. சினிமாக்காரங்க தானே அப்படி இப்படின்னு அந்த பசங்க பேசினாங்க.
உடனே எதுக்கு இப்படி பேசுறீங்கன்னு என் மகன்கள் கத்தினாங்க. அப்போ ஒரு பையன் போன் பண்ணி நாலு பேரை வர வச்சுட்டான். அப்புறம் கெட்ட வார்த்தை பேசிட்டே இருக்காங்க. நான் என் மகன்களை தடுக்க முயன்றப்போ அவங்க கல் வீசி எங்களை அடிச்சுட்டாங்க. என் மகன்களுக்கும் நல்ல அடிபட்டிருச்சு. எதுவுமே தெரியாம என்ன நடந்துச்சுன்னு தெரியாம இஷ்டத்துக்கு என்னென்னமோ எழுதுறாங்க. என்னென்னமோ பண்றாங்க. பேசுறாங்க. நாங்க அந்த மாதிரி ஆளுங்க கிடையாது. என் வீட்டுக்காரங்க 40 வருஷமா இந்த இண்டஸ்ட்ரில இருக்காங்க.
இத்தனை வருஷமா இந்த சென்னையில நான் எப்படி இருக்கேன்னு எல்லாருக்கும் தெரியும். ஏன் இப்படி பேசுறாங்கன்னு எங்களுக்கு புரியவே மாட்டேங்குது. இந்த விஷயத்துக்கு பின்னாடி யார் இருக்காங்கன்னு தெரியாது. என் மகன்கள் கேஸ் கொடுக்கலாம் என்று சொன்னாங்க. அப்போ நான் தான் அப்பா வேற ஊர்ல இல்ல. அவங்க சின்ன பசங்க, போட்டும் அப்படின்னு சொன்னேன். ஏன்னா நானும் ஒரு தாய் தான். பசங்க பத்தி எனக்கு தெரியும். அந்த கவலை என்னன்னு எனக்கு தெரியும். ஜெயிலுக்கு போனா அவங்க லைஃப் வீணா போயிரும்னு நான் என் பசங்களை சமாதானப்படுத்தினேன். என் பசங்களையும் நான் திட்டிட்டேன்.
அந்த கோவத்துல நானும் ரூமுக்கு போய் படுத்துட்டேன். அதுக்கப்புறம் என் பசங்க வீட்ல இல்ல என் வீட்ல வேலை பாக்குறவங்க கிட்ட கேட்டேன் பசங்க எங்க போயிருக்காங்கன்னு. அடிபட்டு இருக்கு ஹாஸ்பிடல் போறேன்னு சொல்லிட்டு போயிருக்காங்க. அதுக்கப்புறம் என் பசங்களோட போன் சுவிட்ச் ஆப் ஆயிடுச்சு. மீடியால என்னென்னமோ போடுறாங்க. அத பாத்துட்டு என் பசங்க பயந்துட்டாங்க. என் பசங்க எங்க இருக்காங்கன்னு தெரியல. நானும் அந்த கவலையில தான் இருக்கேன். சின்ன பசங்கன்னு அவங்கள விட்டது தப்பா போச்சு. என் கணவருக்கு நல்ல பெயர் இருக்கு. அவருக்காக நாங்க பயந்து வாழுறோம். ஆண்டவர் ஒருத்தர் இருக்காரு என கண்ணீருடன் பேசி உள்ளார்.