பிரபல நடிகரான ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யப் போவதாக அறிவித்தார் .சோசியல் மீடியா முழுவதும் ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்து செய்தி தான் உலா வந்தது. திருமண வாழ்க்கையில் மன கஷ்டங்கள் இருந்தாலும் படங்களில் ஜெயம் ரவி தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் தான் பிரதர் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்ட ஜெயம் ரவியிடம் விவாகரத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில்ளித்த ஜெயம் ரவி விவாகரத்து விஷயம் வருத்தம் அளிக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு குடும்பத்தில் சில பிரச்சனைகள் இருந்தது. தனிப்பட்ட காரணங்களால் அதை என்னால் சொல்ல முடியாது. என் பசங்களுக்காக நான் எதையும் பேச வேண்டாம் என நினைக்கிறேன். பிரபல பாடகி கென்யா பெங்களூரைச் சேர்ந்தவர். அவருக்கு அம்மா, அப்பா கிடையாது. ரொம்ப நல்ல பொண்ணு.
நடிகர் ஜீவா ஒரு ஆல்பம் பண்ணினார். அந்த ஆல்பம் விழாவில் தான் அவர் எனக்கு அறிமுகமானார். பாடகி என்பதை தாண்டி அவர் ஒரு சைக்காலஜிஸ்ட். தனது பேச்சு மூலமாக நிறைய பேரை குணப்படுத்தியுள்ளார். என்னைப் பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்க. அந்த பொண்ண பற்றி மட்டும் அவதூறா பேசாதீங்க என கூறியுள்ளார்.
இந்த நிலையில் ஜெயம் ரவியால் சர்ச்சையில் சிக்கிய கெனிஷா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் கூறியிருப்பதாவது, மக்களின் இதயங்களில் இருக்கும் பெரும்பாலான காயங்கள் எதிரிகளால் உருவானது கிடையாது. அவர்களை மிகவும் நேசிப்பதாக கூறும் நபர்களால் உருவாகிறது. உங்களுக்காக மகிழ்ச்சியாக இல்லாத நபர்களை பற்றி கவலை படவே வேண்டாம். நான் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் ஒரு புது வாழ்க்கையை தொடங்க தயாராக இருக்கிறேன் என பதிவிட்டுள்ளார். அந்த பதிவு இணையத்தில் வைரலாகிறது.