Categories: சினிமா

பாடகி கல்பனாவின் திடீர் தற்கொலை முயற்சிக்கு காரணம் என்ன?.. அவருடைய மகள் பரபரப்பு பேட்டி..!

Spread the love

தமிழ் சினிமாவில் முக்கிய பின்னணி பாடகி களில் ஒருவர்தான் கல்பனா. ராசாவின் மனசுல படம் தொடங்கி வரலாறு, மைனா, ரஜினி முருகன் மற்றும் மாமன்னன் என இவர் பல படங்களில் பல்வேறு பாடல்களை பாடியுள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் முக்கிய பாடகியாக வலம் வந்தார். அங்கும் முன்னணி ஹீரோ படங்களில் பாடல்களை பாடியுள்ளார். மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் கூட இவர் பாடல்களை பாடியுள்ளார். இதனிடையே இவர் ஹைதராபாத்தில் உள்ள தன்னுடைய இல்லத்தில் தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹைதராபாத்தில் நிஜாம் பேட் பகுதியில் இவர் வசித்து வரும் நிலையில் கடந்த இரண்டு நாட்களாகவே அவர் வீட்டை விட்டு வெளியே வரவில்லை என கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அவருக்கு போன் செய்த நிலையில் எடுக்கவில்லை. அவருடைய கணவர் வேலை விஷயமாக சென்னை வந்திருந்த நிலையில் அவரிடமும் இது குறித்து தகவல் தெரிவித்துள்ளனர். பிறகு அவரும் தன் மனைவி கல்பனாவுக்கு போன் செய்த நிலையில் அவராலும் தன் மனைவியை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கல்பனா வீட்டின் கதவை உடைத்துக் கொண்டே உள்ளே சென்று பார்த்தபோது கல்பனா வீட்டில் சுயநினைவின்றி கிடந்துள்ளார். உடனே அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவர் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வெண்டிலேட்டர் உதவியுடன் கல்பனாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அவர் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கணவருக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு என்றும் அதனால் மன உளைச்சலில் இருந்த கல்பனா இந்த முடிவை எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இப்படியான நிலையில் பாடகி கல்பனாவின் மகள் பேட்டி கொடுத்துள்ளார். அதில், நான் கல்பனாவின் மகள். அம்மா தற்போது நன்றாக இருக்கிறார்.

அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை. என்னுடைய அப்பா அம்மா எடையை எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது. மன அழுத்தம் காரணமாக அம்மா மருத்துவரின் பரிந்துரையின் பெயரில் தினமும் தூக்க மாத்திரைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில் அவர் எடுத்துக் கொண்ட மாத்திரையில் கொஞ்சம் ஓவர் டோஸ் ஆகிவிட்டது. அம்மா தற்கொலை முயற்சி எல்லாம் செய்யவில்லை. மற்றபடி எங்கள் குடும்பத்தில் எந்த பிரச்சனையும் கிடையாது. நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியாக தான் இருக்கிறோம். தயவு செய்து தவறான செய்திகளை பரப்ப வேண்டாம். இன்னும் இரண்டு மூன்று நாட்களில் அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்லலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர் என்று கல்பனாவின் மகள் அந்த பேட்டியில் பேசியுள்ளார்.

Nanthini

Recent Posts

இரத்தக் களரியான இலங்கை சிறைச்சாலை… தடுத்த போலீசாருக்கு நேர்ந்த கொடூரம்… போர்க்களமாக மாறிய நீர்கொழும்பு ஜெயில்…!

இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…

6 மணத்தியாலங்கள் ago

அயோத்தி ராமர் கோயில் விவகாரம்… டெலிட் செய்யப்பட்ட வீடியோவில் சிக்கிய ஆதாரம்… அம்பலமான அதிர்ச்சி உண்மை…!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…

6 மணத்தியாலங்கள் ago

திடீரென அணைந்த விளக்குகள்… காட்டுமன்னார்கோவில் அரசு மாளிகையில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி… காரில் தவித்த சௌமியா அன்புமணி… என்ன நடந்தது…?

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…

7 மணத்தியாலங்கள் ago

பயங்கர வெள்ளத்தில் சிக்கிய சொகுசு கார்கள், புல்டோசர்கள்… காஷ்மீரில் விடிய விடிய நடந்த கோரத்தாண்டவம்… நடுங்க வைக்கும் வீடியோ…!

ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…

7 மணத்தியாலங்கள் ago

இன்ஸ்டா கள்ளக்காதல் விபரீதம்… ஆண் நண்பர்களுக்கு நிர்வாண… வீடியோ அனுப்பிய மனைவி… காட்டுக்குள் வீசிவிட்டு தப்பிய கணவர் அதிரடி கைது…!!

கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…

7 மணத்தியாலங்கள் ago