10 தூக்க மாத்திரை சாப்பிட்டேன்.. தற்கொலைக்கு முயன்ற பாடகி கல்பனா வெளியிட்ட பரபரப்பு வீடியோ..!

By Nanthini on மார்ச் 7, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் முக்கிய பின்னணி பாடகி களில் ஒருவர்தான் கல்பனா. ராசாவின் மனசுல படம் தொடங்கி வரலாறு, மைனா, ரஜினி முருகன் மற்றும் மாமன்னன் என இவர் பல படங்களில் பல்வேறு பாடல்களை பாடியுள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் முக்கிய பாடகியாக வலம் வந்தார். அங்கும் முன்னணி ஹீரோ படங்களில் பாடல்களை பாடியுள்ளார். மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் கூட இவர் பாடல்களை பாடியுள்ளார். இதனிடையே இவர் ஹைதராபாத்தில் உள்ள தன்னுடைய இல்லத்தில் தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹைதராபாத்தில் நிஜாம் பேட் பகுதியில் இவர் வசித்து வரும் நிலையில் கடந்த இரண்டு நாட்களாகவே அவர் வீட்டை விட்டு வெளியே வரவில்லை என கூறப்படுகிறது.

பாடகி கல்பனா தற்கொலைக்கு முயலவில்லை' - தூக்க மாத்திரை ஓவர் டோஸ் ஆனதாக மகள் விளக்கம் | Singer Kalpana's daughter denies mothers suicide attempt reports - hindutamil.in

   

இதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அவருக்கு போன் செய்த நிலையில் எடுக்கவில்லை. அவருடைய கணவர் வேலை விஷயமாக சென்னை வந்திருந்த நிலையில் அவரிடமும் இது குறித்து தகவல் தெரிவித்துள்ளனர். பிறகு அவரும் தன் மனைவி கல்பனாவுக்கு போன் செய்த நிலையில் அவராலும் தன் மனைவியை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கல்பனா வீட்டின் கதவை உடைத்துக் கொண்டே உள்ளே சென்று பார்த்தபோது கல்பனா வீட்டில் சுயநினைவின்றி கிடந்துள்ளார். உடனே அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

   

பிரபல பாடகி கல்பனாவுக்கு என்ன நடந்தது? தற்கொலை முயற்சியால் மருத்துவமனையில் அனுமதி! - தமிழ்நாடு

 
இதனைத் தொடர்ந்து கல்பனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சோசியல் மீடியாவில் பாடகி கல்பனா குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக செய்திகள் பரவி வந்தது. இப்படியான நிலையில் இது தொடர்பாக நடிகை கல்பனா தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், என்னை பற்றியும் என் கணவரை பற்றியும் சோசியல் மீடியாவில் ஒரு தவறான வதந்தி பரவி வருகிறது. அது தொடர்பாக விளக்கம் கொடுக்க தான் இந்த பதிவை போட்டு உள்ளேன். நான் சின்ன வயசுல பிஎச்டி மற்றும் எல்எல்பி என நிறைய விஷயங்களை பண்ணிட்டு இருக்கேன். அது மட்டுமல்லாமல் என்னுடைய இசைத் துறையின் மீது நான் மிகப்பெரிய நம்பிக்கை வைத்துள்ளேன். அதனால் எனக்கு நிறைய மன அழுத்தங்கள் இருந்ததால் கடந்த சில ஆண்டுகளாக நான் சரியாக தூங்கவில்லை. இது தொடர்பாக மருத்துவரை சந்தித்தபோது இன்போமேனியா என்று அதற்கு மருத்துவர்கள் விளக்கம் கொடுத்தனர்.
வதந்தி பரப்பாதீங்க..! நான் இன்று உயிரோடு இருக்க காரணமே அவர் தான்… பாடகி கல்பனா வெளியிட்ட வீடியோ..!! – Seithi Solai
சில மருந்துகளையும் எனக்கு கொடுத்திருந்தனர். அந்த மெடிசனின் அளவு கொஞ்சம் அதிகமாகி விட்டது. நான் எட்டு தூக்க மாத்திரைகளை எடுத்துக் கொண்டேன். அது எனக்கு உதவாததால் நான் மேலும் 10 மாத்திரைகளை உட்கொண்டதால் அது என்னுடைய நுரையீரலை பாதித்து விட்டதால் நான் சுயநலவை இழந்துவிட்டேன். நான் இன்று உயிரோடு திரும்பி அனைவரிடமும் பேசிக் கொண்டிருக்கிறேன் என்றால் அதற்கு என் கணவர் எனக்காக பட்ட பாடு தான் காரணம். என்னை காப்பாற்ற அவர் பட்ட கஷ்டம் சொல்லவே முடியாது. மீடியா மற்றும் போலீஸ் என அனைவருமே கஷ்டப்பட்டு என்னை காப்பாத்தினாங்க. தயவுசெய்து யாரும் வதந்தியை பரப்ப வேண்டாம். எனக்கு ரொம்ப நல்ல கணவர் கிடைச்சிருக்காரு நானும் அவரும் சந்தோசமா தான் இருக்கும் என்று கல்பனா வீடியோ வெளியிட்டுள்ளார்.