சிங்கப்பூரில் நானும் சந்தோஷ் நாராயணனும் ஒரு சம்பவம் பண்ணோம்… பாடகர் அந்தோணி தாஸ் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்..!!

By Nanthini on ஆடி 16, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் தற்போது பிரபலமான பாடகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் அந்தோணி தாஸ். தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த இவர் சிறு வயதில் இருந்தே பாடல்கள் மீது தீராத காதல் கொண்டதால் நாட்டுப்புறப் பாடகராக உருமாறினார். அது மட்டுமல்லாமல் தற்போது வரை பல கச்சேரிகளையும் செய்து வருகிறார். தெருக்கூத்து நிகழ்ச்சிகளிலும் இவர் பாடியுள்ளார். இதன் மூலம் இவருக்கு சினிமாவில் பாடுவதற்கான வாய்ப்புகள் கிடைத்தது.

   

இவரின் திறமைகளை தெரிந்து கொண்ட இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தான் இவரின் பாடலுக்கு முதலில் வாய்ப்பு கொடுத்தார். முதல் முதலில் அந்தோணி தாஸ் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூது கவ்வும் திரைப்படத்தில் காசு பணம் துட்டு துளி மணி என்ற பாடலை பாடியிருந்தார். அந்தப் பாடல் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பாண்டியநாடு மற்றும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என அடுத்தடுத்து பல திரைப்படங்களில் குத்தாட்ட பாடல்களை பாடினார்.

   

 

தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி பாடகர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அதே சமயம் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்ற ரசிகர்களை கவர்ந்தார். இப்படி சினிமாவில் பிசியான பாடகராக வளம் வந்து கொண்டிருக்கும் அந்தோணி தாஸ் சிங்கப்பூரில் நடைபெற்ற ஒரு கச்சேரியில் அவரும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும் சேர்ந்து செய்த மறக்க முடியாத சம்பவத்தை பகிர்ந்துள்ளார். அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Aval Vikatan இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@avalvikatan)