போடு ரகிட ரகிட..! CM விஜய் டெல்லியிலிருந்து வந்ததும் காத்திருக்கும் சம்பவம்… எல்லாமே தயார்…!!

By Soundarya on வைகாசி 28, 2026

Spread the love

தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களைத் தடுத்து, அவர்களுக்குப் பாதுகாப்பான சூழலை உறுதி செய்யும் நோக்கில் ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ என்ற புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விசேஷப் பாதுகாப்புத் திட்டம் முழுக்க முழுக்க பெண் காவலர்களைக் கொண்டு, முதலமைச்சர் விஜய்யின் நேரடி கண்காணிப்பின் கீழ் செயல்படத் தயாராகி வருகிறது. நேற்று தொடங்கப்படவிருந்த இத்திட்டம், முதலமைச்சர் விஜய் அரசுமுறைப் பயணமாக டெல்லி சென்றிருந்ததால் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

தற்போது முதலமைச்சர் டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு தமிழகம் திரும்பியுள்ள நிலையில், இந்த அதிரடித் திட்டம் வரும் வெள்ளிக்கிழமை முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரவுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் தயார் செய்யப்பட்டுள்ள சிறப்பு ரோந்து வாகனங்கள் மற்றும் நவீன வசதிகள் மூலம், பெண்களுக்குப் பொது இடங்களில் ஏற்படும் அச்சுறுத்தல்களுக்குக் காவல்துறை தரப்பில் இருந்து மிக விரைவான மற்றும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.