சிங்கப்பூர் சலூன் VS ப்ளூ ஸ்டார்.. 5 நாள் முடிவில் 5 கோடியை எட்டிய படம் எது தெரியுமா ..?

By Mahalakshmi

Updated on:

RJ பாலாஜி நடிப்பில் உருவான சிங்கப்பூர் சலூன் மற்றும் அசோக் செல்வன் நடிப்பில் உருவான ப்ளூ ஸ்டார்  திரைபடமும் கடந்த 23ம் தேதி ஒன்றாக வெளிவந்தது. இந்த இரண்டு படங்களுக்குமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த இரண்டு படங்களும் வெளிவந்து தற்போது மூன்று நாட்களை கடந்துள்ள நிலையில், உலகளவில் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

   

இயக்குனர் கோகுல் இயக்கத்தில் ஆர். ஜே. பாலாஜி நடிப்பில்  உருவான சிங்கப்பூர் சலூன் திரைப்படம் காமெடி கலந்த ஒரு வகையான கலவை படமாக இருந்தது. இந்த திரைப்படம் வந்த முதல் நாளிலேயே 1 கோடி வசூல் பெற்றது என படக்குழுவினர் அறிவித்தனர். இந்த வகையில், உலகளவில் மூன்று நாட்களில் ரூ. 5 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டியுள்ளது.

மேலும், ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன் மற்றும் ஷாந்தனு நடிப்பில் வெளிவந்த  திரைப்படம் ப்ளூ ஸ்டார். கிரிக்கெட்டில் சாதிய அரசியல் பேசும் படமாக இருக்கிறது.இந்த திரைப்படம் வந்த முதல் நாளிலே 80 லட்சம் வசூலை ஈட்டியது. மேலும், உலகளவில் கடந்த மூன்று நாட்களில் ரூ. 3 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

இந்த இரண்டு படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் வசூல் ரீதியாக இனி வரும் நாட்களிலும்  பாக்ஸ் ஆபிசில் சிறந்த வரவேற்பு இருக்கும் என கூறப்படுகிறது.

author avatar
Mahalakshmi