தவெகவில் மாற்றுக்கட்சியிலிருந்து இணைந்துள்ள நபர்களுக்கு மாவட்டச் செயலாளர் போன்ற உயர் பொறுப்புகள் வழங்கப்பட்டு வருவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள், அக்கட்சியின் ஆரம்பக்கால நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது. இதன் தொடர்ச்சியாக, தமிழக அரசின் ஸ்டார்ட்அப் டிஎன் (StartupTN) முதன்மை நிர்வாக அதிகாரி பதவிக்கான நியமனத்திலும் தவெகவினரிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இதனிடையே, அதிமுகவில் இருந்து விலகி அண்மையில் தவெகவில் தம்மை இணைத்துக் கொண்ட சிங்கை ராமச்சந்திரனை அரசின் முக்கிய தொழில் முகமையின் தலைமைப் பொறுப்பில் நியமிக்க திட்டமிட்டுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல்கள், கட்சி வட்டாரத்தில் மேலும் பரபரப்பையும் காரசாரமான விவாதங்களையும் கிளப்பியுள்ளன.
