Connect with us

அந்த மனசு தான் சார் கடவுள்.. சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவித்த காமெடி நடிகர்.. முதல் ஆளாக ஓடோடி வந்து உதவி செய்த சிம்பு..!!

CINEMA

அந்த மனசு தான் சார் கடவுள்.. சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவித்த காமெடி நடிகர்.. முதல் ஆளாக ஓடோடி வந்து உதவி செய்த சிம்பு..!!

 

நகைச்சுவை நடிகரான வெங்கல் ராவ் ஆந்திராவின் விஜயவாடாவுக்கு அருகில் இருக்கும் கிராமத்தில் பிறந்தவர். முதலில் சினிமாவுக்குள் சண்டை கலைஞராக தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு கடந்த 1995-ஆம் ஆண்டு பி.வாசு இயக்கத்தில் பிரபு நடிப்பில் உருவான கட்டுமரக்காரன் படத்தின் மூலம் நடிகராக என்ட்ரி கொடுத்தார்.

Vengal Rao: "நடிகர்கள், சங்கங்கள் என் சிகிச்சைக்கு உதவி செய்யுங்கள்" - நடிகர் வெங்கல் ராவ் கோரிக்கை | Vadivel's Co comedian Vengal Rao asks for help to his Medical expenses

   

இவருக்கு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பிரபல காமெடி நடிகரான வடிவேலுவுடன் இணைந்து வெங்கல் ராவ் 30-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு சுராஜ் இயக்கத்தில் வடிவேல் நடித்த நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திலும் வெங்கல் ராவ் நடித்துள்ளார்.

Simbu on boycott trend: 'Audiences have all the right to reject bad content' - Hindustan Times

இந்நிலையில் சிறுநீரக கோளாறால் அவதிப்பட்ட வெங்கல் ராவ் கடந்த 2022- ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இந்த நிலையில் வெங்கல் ராவ் பேசும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அவர் கூறியதாவது, கை கால்கள் விளங்காமல் இருக்கிறேன். என்னால் பேச முடியவில்லை. மாத்திரை வாங்க கூட பணம் இல்ல. மருத்துவமனைக்கு போக முடியல. ரொம்ப கஷ்டப்படுறேன்.

actor silambarasan gives 2 lakhs to comedian actor vengal rao | Silambarasan - Vengal Rao: மருத்துவ உதவி கேட்ட வெங்கல் ராவ்.. யோசிக்காமல் சிம்பு செய்த நிதியுதவி!

எனக்கு சினிமா நட்சத்திரங்களும், தொழிலாளர்களும் உதவி பண்ணுங்க என வெங்கல் ராவ் பேசி வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. அதனைப் பார்த்த ரசிகர்கள் காமெடி நடிகராக வலம் வந்தவருக்கு இப்படி ஒரு நிலைமையா என பரிதாபப்பட்டனர். இந்த நிலையில் நடிகர் சிம்பு வெங்கல் ராவுக்கு 2 லட்ச ரூபாய் பணம் கொடுத்து உதவி செய்துள்ளார். அவரது செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். வெங்கல் ராவ் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் வேண்டிக் கொள்வதாக கூறி வருகின்றனர்.

Simbu on boycott culture: 'Don't think audiences should be blamed because…' | Tamil News - The Indian Express

author avatar
Priya Ram
Continue Reading
To Top