சிம்பு தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான புகழ்பெற்ற நடிகர் ஆவார். இவரது இயற்பெயர் சிலம்பரசன் என்பதாகும். இவரது தந்தை டி ராஜேந்தர் தமிழ் சினிமாவில் பிரபலமாக பணியாற்றிய இயக்குனர் மற்றும் நடிகராவார். 1980 களில் இவரது தந்தை இயக்கிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சிம்பு.

அதற்குப் பிறகு 2002 ஆம் ஆண்டு தனது தந்தை இயக்கிய காதல் அழிவதில்லை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து கோவில், மன்மதன், சரவணா, காளை, சிலம்பாட்டம், விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற பல கமர்சியல் வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமானார் சிம்பு. 2010 காலகட்டத்தில் புகழின் உச்சியில் இருந்தார் சிம்பு.
அதற்குப் பிறகு சிறிது உடல் எடை கூடிய சிம்பு சமீபத்தில் ஒரு வருட காலமாக கஷ்டப்பட்டு உடல் எடையை குறைத்து இருந்தார். அந்த பயணத்தை வீடியோவாகவும் வெளியிட்டார். அதிலிருந்து இவரை அட்மேன் சிம்பு என்று ரசிகர்கள் அழைக்கின்றனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்துவரும் சிம்பு அவ்வப்போது ஷூட்டிங்கிற்கு நேரத்திற்கு வரமாட்டார், சொன்ன தேதிக்கு நிகழ்ச்சிகளுக்கு வரமாட்டார் என்று பல பேச்சுகள் நிலவி வந்தது.
அது சமீப காலமாக ஒரு பிரச்சினையாகவே மாறியது. வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனரான ஐசரி கணேஷ் உடனான ஒரு ஒப்பந்தத்தில் கொரோனா குமார் என்ற படத்தில் நடிப்பதாக சிம்பு ஒப்பந்தமாகி இருந்திருக்கிறார். ஆரம்பத்தில் சிறிது காலம் சூட்டிங் சென்று விட்டு பிறகு சிம்பு ஷூட்ங்கிற்கு செல்லவில்லை. இதை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த ஐசரி கணேஷ் நீதிமன்றத்தில் இருந்து அட்வான்ஸ் தொகை வாங்கிய சிம்புவை ஒரு கோடி ரூபாய் டெபாசிட் செய்ய சொல்லி கூறி இருந்தார்கள். நான்கு வருடங்களுக்கு பிறகு தற்போது சமாதான பேச்சு வார்த்தைக்கு நீதிமன்ற உத்தரவின்படி பேசிய போது ஐசரி கணேஷ் சிம்பு ஆகியோர் சமரசம் ஆகி விட்டார்கள்.

அதற்குப் பிறகு நீதிமன்றத்தில் டெபாசிட் செய்த ஒரு கோடி ரூபாய்க்கு வட்டியுடன் சேர்த்து சிம்புவிடம் திருப்பி வழங்கப்பட்டது. தற்போது ஐசரி கணேஷ் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் சிம்பு ஒரு படம் பண்ணுவதாக ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆனால் நீதிமன்றத்தில் விட்டுக்கொடுத்து Main ஆன இடத்தில் செக் வைத்திருக்கிறார் சிம்பு. அது என்னவென்றால் அவர்கள் தயாரிப்பு நிறுவனத்தில் நடிக்க வேண்டும் என்றால் அதிக சம்பளம் கேட்கிறாராம். இதனால் என்னடா இது புது பிரச்சனை என்று ஐசரி கணேஷ் கலக்கத்தில் இருக்கிறார்.
