பிரபல நடிகரான சிம்பு குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். நடிப்பு, இயக்கம், தயாரிப்பு, கதை, திரைக்கதை, எடிட்டிங், இசை என அனைத்தையும் கற்றுக் கொண்டவர். லிட்டில் சூப்பர் ஸ்டார் என சின்ன வயதிலேயே சிம்புவை அழைத்துள்ளனர்.

விண்ணைத்தாண்டி வருவாயா, வெந்து தணிந்தது காடு, பத்து தல உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த மாநாடு திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்திற்காக சிம்பு உடற்பயிற்சி செய்து எடையை குறைத்தார். இந்த நிலையில் மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் தக் லைப் திரைப்படத்தில் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மலையாளத்தில் 2018 என்ற படத்தை இயக்கியவர் ஜூட் அந்தோணி ஜோசப். அவர் சொன்ன கதை சிம்புவுக்கு மிகவும் பிடித்து விட்டது. அந்த படத்திற்கு பட்ஜெட் அதிகம் இதனால் சிம்புவும் இயக்குனரும் தயாரிப்பாளரை தேடி வருகின்றனர். இது மட்டும் இல்லாமல் கதை மேல் இருக்கும் நம்பிக்கை காரணமாக சிம்பு மூன்று மாதங்கள் கால்ஷீட் கொடுக்கிறேன் என கூறியுள்ளாராம்.

#image_title
சிம்புவுக்கு 41 வயது ஆகிறது. ஆனால் அந்த படத்தில் 25 வயது வாலிபராக நடிக்க உள்ளாராம். சிம்புவை தொழில்நுட்பம் மூலம் இளம் வாலிபரை போல காண்பிப்பார்களா அல்லது உடல் எடையை மேலும் குறைத்து நடிப்பாரா என்பதை இனி தான் பார்க்க வேண்டும்.
