பிரபல நடிகரின் மகளை கரம்பிடுக்கும் சிம்பு.. இணையத்தில் கசிந்த தகவலால் ரசிகர்கள் ஹேப்பி.

By Sumathi

Updated on:

இயக்குநர் மற்றும் நடிகர் டி ராஜேந்தர் மகன் சிலம்பரன். 40 வயது கடந்தும் இன்னும் திருமணம் ஆகவில்லை. சிம்புவின் தம்பி குறளரசன். 2019ம் ஆண்டில் நபீலா என்ற இஸ்லாமிய பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார். 4 ஆண்டுகள் ஆன நிலையில், 3 தினங்களுக்கு முன்புதான் குறளரசன், நபீலா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. சிம்பு பெரியப்பா ஆனார். ஏற்கனவே தங்கை தமிழ் இலக்கியாவுக்கு திருமணமாகி, அவருக்கும் மகன் இருக்கிறார். அதனால் சிம்பு, ஏற்கனவே தாய் மாமா பிரமோசனும் பெற்று விட்டார்.

   

கடந்த சில மாதங்களுக்கு முன், டி ராஜேந்தர் உடல் நலம் பாதித்த நிலையில், அமொிக்கா சென்று இருதய அறுவை சிகிச்சை செய்து வந்தார். இப்போதும் முதுமை காரணமாக, உடல் ரீதியான சிரமங்களுடன் இருக்கிறார். தனது 3 பிள்ளைகளில் 2 பேருக்கு திருமணமாகி, பேரன்களை பார்த்துவிட்ட நிலையில், சிலம்பரசனுக்கும் திருமணம் செய்து அவரை மாலையும் கழுத்துமாக பார்த்துவிட வேண்டும் என்று மிகவும் ஆசைப்படுகிறார். டாக்டர்களும் மிக விரைவில் உங்கள் மகன் திருமணத்தை விரைவில் நடத்தி விடுங்கள் என சூசகமாக டி ராஜேந்தரிடம் கூறியிருக்கின்றனர்.

இந்நிலையில் போடா போடி படத்தில் நடித்த போதே சரத்குமார் மகள் வரலட்சுமிக்கும், சிலம்பரசனுக்கும் இடையே கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் இருவரும் காதலித்தனர். ஆனால் ஒரு கட்டத்தில் பிரேக்கப் ஆகியிருக்கிறது. இப்போது தெலுங்கு படங்களில் வரலட்சுமி பிஸியாக நடித்து வருகிறார். அவருக்கும் இன்னும் திருமணமாகவில்லை. இதற்கிடையே வரலட்சுமியை சிம்புவுக்கு திருமணம் செய்து வைத்து விடலாம் என டி ராஜேந்தர் முடிவு செய்திருக்கிறார். இதற்கு சரத்குமாரும் சம்மதிக்க முன்வந்திருக்கிறார்.

ஆனால் சிம்புவின் அம்மா உஷா ராஜேந்தர், சரத்குமார் மனைவி ராதிகா ஆகியோர் சற்று தயக்கத்தில் உள்ளனர். ஏனெனில், சினிமாவிலேயே திமிராக நடிப்பவர் வரலட்சுமி. அதே போல், சிம்பு நடித்த படங்களில் அம்மாவாக நடித்த ராதிகாவுக்கு, சிம்புவின் மன்மத வேலைகள் எல்லாம் தெரியும். அதனால், நாளை வரலட்சுமி – சிம்பு திருமணம் நடந்தால் இருவரும் சரியாக குடும்பம் நடத்துவார்களா என்ற அச்சத்தில் அவர்கள் உள்ளனர். ஆனால் இரு குடும்பங்களும் நல்லவிதமாக கலந்து பேசி விரைவில் ஒரு சுமூகமான முடிவுக்கு வந்து, சிம்பு – வரலட்சுமி திருமணம் குறித்து அறிவிக்க வாய்ப்பு உருவாகி உள்ளது.

author avatar
Sumathi