அருண் விஜய்க்கும் சிம்புவுக்கும் இடையே அடிதடி லெவலுக்கு சென்ற வாக்குவாதம்… பின்னணி என்ன?

By vinoth

Updated on:

தமிழ் சினிமாவில் 9 மாதக் குழந்தையாக இருந்த போதில் இருந்தே நடிகராக வலம் வருகிறார் சிம்பு. குழந்தை நட்சத்திரமாகவே பல படங்களில் நடித்திருந்த சிம்பு வளர்ந்த பின்னர் காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் ஹீரோவானார். அதன் பின்னர் மன்மதன், வல்லவன், விண்ணைத் தாண்டி வருவாயா மற்றும் மாநாடு என ஹிட் படங்களில் நடித்து இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்.

இந்த பயணத்தில் சிம்பு பல சர்ச்சைகளை எதிர்கொண்டுள்ளார். நயன்தாராவோடு காதல் மற்றும் அதன் பிரிவு, தனுஷோடு அடிக்கடி முட்டல் மோதல், சினிமா ஷூட்டிங்குக்கு ஒழுங்காக வராமல் தயாரிப்பாளர்களை இழுத்தடித்தது என அடிக்கடி அவர் பெயர் டேமேஜ் ஆனது. இதனால் ஒரு கட்டத்தில் அவர் மேல் ரெட் கார்ட் விதிக்கப்படும் அளவுக்கு எல்லாம் சென்றது.

   

ஆனால் அதன் பிறகு கம்பேக் கொடுத்து மாநாடு என்ற 100 கோடி ரூபாய் பிளாக்பஸ்டர் மாநாடு படத்தைக் கொடுத்தார்.அதன் பின்னர் இப்போது தக்லைஃப் மற்றும் தேசிங் பெரியசாமி இயக்கும் படங்களில் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் சிம்புவுக்கும் அருண் விஜய்க்கும் இடையே 20 ஆண்டுகளுக்கு முன்னர் வெளிநாட்டில் வைத்து நடந்த ஒரு அடிதடி சண்டை பற்றிய புகைச்சல் இப்போது வெளியாகியுள்ளது. விஜயகாந்த் தலைமையில் நடிகர்கள் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவுக்கு சென்று கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். அதில் சென்ற அருண் விஜய்யிடம் சிம்பு ஏதோ சொல்லப்போக அவர்கள் இருவருக்கும் இடையே அடிதடி லெவலுக்கு அந்த வாக்குவாதம் சென்றுள்ளது. பின்னர் சுற்றியிருந்தவர்கள் அவர்களை விலக்கிவிட்டு சமாதானப் படுத்தினார்களாம்.

அப்போது சிம்பு மன்மதன் என்ற ஹிட் படத்தைக் கொடுத்து மார்க்கெட்டில் இருந்தார். ஆனால் அருண் விஜய் தனது இடத்துக்காக போராடிக் கொண்டிருந்தார். அது சம்மந்தமாக சிம்பு ஏதோ கிண்டலாக சொல்லப் போக அதில் அருண் விஜய் கோபமாகியதாக சொல்லப்படுகிறது. அதன் பிறகு இருவரும் சமாதானமாகி மணிரத்னம் இயக்கிய செக்கச் சிவந்த வானம் திரைப்படத்தில் நடித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.