மரணம் உங்களை நெருங்குகிறதா?… கருட புராணம் கூறும் அறிகுறிகள்…. பலரும் அறியாத ரகசியம்…!

By Nanthini on தை 3, 2026

Spread the love

பொதுவாகவே அனைத்து மதங்களிலும் இறப்புக்குப் பிறகு சொர்க்கம் மற்றும் நரகம் உள்ளதாகவும் இந்த உலகில் செய்யும் பாவங்களுக்கு தண்டனை வழங்கப்படும் எனவும் நம்பப்படுகிறது. அதன்படி இந்து சாஸ்திரத்தில் கருட புராணத்தில் இறப்பு பற்றியும் இறப்பு நெருங்குவதற்கான அறிகுறிகள் குறித்தும் அதன் பிறகு என்ன நடக்கும் என்பது பற்றியும் தெளிவான விளக்கம் உள்ளது. இந்துக்களில் பெரும்பாலானவர்கள் இதன் மீது அதிக நம்பிக்கை கொண்டுள்ளனர்.

ஒருவருடைய நிழல் தண்ணீரில், எண்ணெயில், கண்ணாடியில் தோன்றாவிட்டால் அல்லது ஒருவரின் நிழல் சிதைந்து காணப்பட்டால், உயிரானது உடலை விட்டு வெளியேறும் நேரம் நெருங்கிவிட்டது என உணர்த்துகின்றது. ஒருவர் உயிரிழப்பதற்கான நாட்கள் நெருங்க நெருங்க அவருடைய பார்வை மங்க தொடங்கும். தன்னைச் சுற்றி அமர்ந்திருப்பவர்களை பார்க்கக்கூட முடியாத நிலை ஏற்படும். எமதூதர்கள் அருகில் இருப்பதால் இந்த உலகத்தில் இருப்பவர்களை பார்க்க முடியாத நிலை அவர்களுக்கு உருவாகும். மரணம் நெருங்கும் போது எமனின் இரண்டு தூதர்கள் வந்து இறக்கும் நபரின் முன் இருப்பதாக கருட புராணம் கூறுகின்றது.

   

தன்னுடைய வாழ்நாள் முழுவதும் தீய செயல்களை செய்தவன் இந்த எமதங்களுக்கு அஞ்சுகிறான் என்றும் அதிக நல்ல செயல்களை செய்தவர்களுக்கு இறப்பு பற்றி அச்சம் இருக்காது எனவும் கருட புராணம் கூறுகின்றது. கருட புராணத்தில் குறிப்பிடப்படுவதன் அடிப்படையில் இறப்பதற்கு முன்பு ஒருவருடைய கையில் உள்ள ரேகைகள் மிகவும் மங்களாகிவிடும். சிலருக்கு ரேகைகள் தெரியாமல் போய்விடும். மரணம் நெருங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பாக இந்த அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கும்.

   

இறப்பு ஒருவரை நெருங்கி விட்டது என்றால் விசித்திரமான கனவுகள் வரும். ஒரு நபர் தன்னுடைய கனவுகளில் அணைந்து போன விளக்கு உட்பட பல விசித்திரமான விளக்குகளை கனவில் காண்பார்கள். மரணம் நெருங்குகின்றது என்ற பட்சத்தில் ஒருவர் தன்னை சுற்றி ஆன்மாக்களை உணரத் தொடங்குவார்கள். அவை அவருடைய மூதாதையர்களின் ஆன்மாக்களாக இருக்கலாம். தங்களுடைய உறவினர் இப்போது மறு உலகத்தில் வரப்போவதால் அவர்கள் அவருடைய வருகையை கொண்டாட தொடங்குகின்றனர். இதன் காரணமாகவே ஆன்மாக்கள் கண்களுக்கு புலப்பட ஆரம்பிக்கும் என்று மரணம் குறித்து கருட புராணம் விளக்குகின்றது.