Connect with us

மீண்டும் அதே கூட்டணியா..? ‘அயலான் 2’ வருவது கணபார்ம்.. அந்த ஒரு விஷயத்துக்கு மட்டும் 50 கோடியாம்..

CINEMA

மீண்டும் அதே கூட்டணியா..? ‘அயலான் 2’ வருவது கணபார்ம்.. அந்த ஒரு விஷயத்துக்கு மட்டும் 50 கோடியாம்..

முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அயலான் திரைப்படம் கடந்த 12-ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் ராகுல் ப்ரீத்தி சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட ஏராளமான நடிகர்கள் நடித்திருந்தனர். அயலான் படத்தின் VFX காட்சிகள் ரசிகர்களுக்கு நல்ல என்டர்டைன்மெண்டாக அமைந்தது.

   

சயின்ஸ் பிக்சன் ஜானரில் ஏலியனை மையமாக வைத்து அயலான் படம் எடுக்கப்பட்டது. இந்த படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று தந்தது. குழந்தைகளை கவரும் விதமாக உருவாக்கப்பட்ட அயலான் திரைப்படம் 80 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படுகிறது. உலக அளவில் 50 கோடி ரூபாய் வசூலை தாண்டி வசூலித்து வருகிறது.

   

 

படத்தின் VFX காட்சிகளை அமைத்த பாண்டன் எஃப் எக்ஸ் நிறுவனம் அயலான் படத்திற்கு கிடைத்த வரவேற்பின் அடிப்படையில் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக அறிவித்தது. இதனால் தயாரிப்பு நிறுவனமான KJR ஸ்டுடியோஸ் உடன் இணைந்து அயலான் 2 படத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இப்போது இருக்கும் டிரெண்டிற்கு தகுந்தாற் போல படத்தின் கதையும், சிறந்த விஷுவல் அம்சமும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக படத்தில் இயக்குனர் ஆர்.ரவிக்குமார் அயலான் படத்தின் இரண்டாவது பாகம் சிறப்பாக அமையும் என கூறியது குறிப்பிடத்தக்கதாகும். முன்னதாகவே VFX காட்சிகளுக்காக மட்டும் 50 கோடி ரூபாயை தயாரிப்பு தரப்பு அயலான் படத்திற்காக ஒதுக்கியது. படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு VFX வேலைகள் தொடங்கவுள்ளது.

author avatar
Priya Ram

More in CINEMA

To Top