“விஜய் என்ன செஞ்சார்..?” விமர்சித்த தங்கை திவ்யா… அண்ணன் சிபி சத்யராஜ் கொடுத்த மாஸ் பதிலடி… சத்யராஜ் குடும்பத்தில் வெடித்த மோதல்…!!

By Soundarya on பங்குனி 5, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய் குறித்து அண்மையில் சில விமர்சனங்களை முன்வைத்தார். “அரசியலுக்கு வருவதற்கு முன்பு நீங்கள் மக்களுக்கு என்ன செய்திருக்கிறீர்கள்?” என்றும், தவெக தொண்டர்கள் பெண்களைத் தவறாகப் பேசுவதாகவும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பிய நிலையில், தவெக ஆதரவாளர்கள் இதற்குப் பதிலடி கொடுத்து வந்தனர்.

இந்நிலையில், விஜய்யின் தீவிர ரசிகரான திவ்யாவின் அண்ணன் மற்றும் நடிகர் சிபி சத்யராஜ், தனது சகோதரிக்குத் திரையுலகப் பாணியில் பதிலடி கொடுத்துள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது தந்தை சத்யராஜ் நடித்த புகழ்பெற்ற ‘அமைதிப்படை’ படத்தின் காட்சியைப் பகிர்ந்துள்ளார். அதில் வரும் “மணியா, நீ வரலாறை தெரிஞ்சுக்கோணும்” என்ற வசனத்தைச் சேர்த்து, விஜய் இதுவரை செய்த பல்வேறு மக்கள் நல உதவிகள் மற்றும் நற்பணிகள் குறித்த வீடியோவைத் தொகுத்து வெளியிட்டுள்ளார்.

   

சிபி சத்யராஜின் இந்தப் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன் விஜய்க்கு ஆதரவாகவும், தங்கை விஜய்க்கு எதிராகவும் அரசியல் ரீதியாகக் கருத்து தெரிவிப்பது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “தங்கைக்குப் புரியும்படி அண்ணன் பதிலடி கொடுத்துவிட்டார்” என விஜய் ரசிகர்கள் இந்த வீடியோவைக் கொண்டாடி வருகின்றனர்.