நடிகை ஸ்ருதிஹாசன் உலகநாயகன் கமல்ஹாசனின் மகள் ஆவார். கடந்த 2000-ஆம் ஆண்டில் ரிலீஸ் ஆன ஹேராம் படத்தில் சுருதிஹாசன் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். தமிழில் 2016 ஆம் ஆண்டு ரிலீசான ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். முன்னணி நடிகர்களான தனுஷ், சூர்யா, விஜய் ஆகியோருடன் இணைந்து ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார்.
இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிப்பு மட்டும் இல்லாமல் பாடல் பாடுவது, இசையமைப்பது என பன்முக திறமை கொண்டவர் சுருதிஹாசன். கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியான உன்னைப் போல் ஒருவன் திரைப்படத்திற்கு சுருதிஹாசன் இசை அமைத்தார்.
இந்த நிலையில் தான் சினிமாவில் அடுத்த கட்டத்திற்கு முன்னேறாததற்கு உடல்நல பிரச்சினைதான் காரணம் என ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார். சில சூப்பர் ஹிட் படங்களில் நடித்த சுருதிஹாசன் தான் முதலில் கமிட் ஆனாராம். அந்த வகையில் ரெமோ படத்தில் கீர்த்தி சுரேஷ்க்கு பதிலாக சுருதிஹாசன் நான் முதலில் நடிக்க கமிட் ஆனார். ஆனால் வளர்ந்து வரும் ஹீரோவான சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அந்த படத்தில் நடிக்க மாட்டேன் என கூறி விலகி விட்டார்.
இதே போல கார்த்தி நடிப்பில் ரிலீசான தோழா படத்திலும் முதலில் ஸ்ருதிஹாசன் தான் நடிக்க கமிட்டாகி ஒருநாள் ஷூட்டிங்கிற்கு சென்றார். மறுநாள் என்ன பிரச்சனை நடந்ததோ தெரியவில்லை அவர் படத்திலிருந்து விலகி விட்டார். அதன் பிறகு தான் தமன்னா தோழா படத்தில் நடித்தார். இப்படி சில நல்ல வாய்ப்புகளை கைவிட ஸ்ருதிஹாசனின் Attitude பிரச்சனையும் ஒரு காரணம் என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.