பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழ் மட்டும் இல்லாமல் ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம், மராத்தி என பல்வேறு மொழிகளில் நடத்தப்படுகிறது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியை இப்போது விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார்.

தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை நாகார்ஜுனாவும், கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சியை சுதீப்பும், மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சி மோகன்லாலும், ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியை சல்மான் கான் தொகுத்து வழங்குகின்றனர். ஹிந்தியில் 18வது பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் நடிகை ஸ்ருதிஹா ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். சூர்யாவுக்கு ஜோடியாக ஸ்ரீ என்ற படத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். திருமணம் ஆகி அவருக்கு ஒரு மகன் உள்ளார். குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூன்றாவது சீசனில் ஸ்ருதிகா போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

அந்த சீசனில் அவர் தான் டைட்டிலையும் வென்றார். அந்த வகையில் இப்போது ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஸ்ருதிகா போட்டியாளராக பங்கேற்றுள்ளார். மேலும் ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கும் முதல் தமிழ் பெண் ஸ்ருதிகா என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
