“வான்கடேவில் அதிசயம்… காற்றில் பறந்த ஸ்ரேயாஸ் ஐயர்”… மிரண்டு போன ரோகித் சர்மா… மொத்த மைதானமே ஷாக்…!

By Nanthini on சித்திரை 17, 2026

Spread the love

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான மோதலில், பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் செய்த அசாத்தியமான ஃபீல்டிங் சாகசம் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, டி காக்கின் அபார சதம் (112 ரன்கள்) மற்றும் நமன் திரின் அரைசதத்தால் வலுவான நிலையை எட்டியது. ஒருகட்டத்தில் மும்பை அணி 200 ரன்களை மிக எளிதாகக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கேப்டன் ஹர்திக் பாண்டியா அதிரடியாக விளையாடத் தொடங்கினார்.

ஆட்டத்தின் 18-வது ஓவரை மார்கோ யான்சன் வீசியபோது, ஹர்திக் பாண்டியா லாங் ஆன் திசையில் ஒரு பிரம்மாண்டமான ஷாட்டை அடித்தார். பந்து உயரே சென்ற விதத்தைப் பார்த்த அனைவரும் அது நிச்சயம் சிக்ஸர் என்றுதான் நினைத்தனர். ஆனால், அங்கு ஃபீல்டிங் நின்றிருந்த பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், மின்னல் வேகத்தில் காற்றில் பறந்து பந்தை ஒற்றை கையால் பிடித்தார். எல்லைக் கோட்டைத் தொடுவதற்கு ஒரு நொடி முன்னதாக, மிக லாவகமாக பந்தை மைதானத்திற்குள் தூக்கி வீச, அது நேராக மற்றொரு வீரர் பார்ட்லெட் கைகளில் தஞ்சமடைந்தது.

   

ஸ்ரேயாஸ் ஐயரின் இந்த “சூப்பர் மேன்” கேட்ச் வான்கடே மைதானத்தையே ஒரு நிமிடம் ஸ்தம்பிக்க வைத்தது. கேட்ச் பிடித்த கையோடு எழுந்த ஸ்ரேயாஸ், மும்பை ரசிகர்களை நோக்கி “சத்தமே கேட்கவில்லையே” என்பது போல சைகை காட்டி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். ஹர்திக் பாண்டியாவின் விக்கெட்டை இழந்தது ஒருபுறம் இருக்க, ஸ்ரேயாஸின் இந்த துடிப்பான ஃபீல்டிங் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்தது.

   

இந்தச் சம்பவம் மும்பை அணியின் டக் அவுட் அருகே நடந்ததால், அங்கு அமர்ந்திருந்த ரோகித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவருமே கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர். ஸ்ரேயாஸ் எப்படி அவ்வளவு உயரத்தில் குதித்து பந்தை தடுத்தார் என்பதை நம்ப முடியாமல், ரோகித் சர்மா ஆச்சரியத்தில் சூர்யகுமாரிடம் சைகை காட்டிய காட்சிகள் கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்திய அணியின் முக்கிய வீரர்களையே மிரள வைத்த ஸ்ரேயாஸின் இந்தச் செயல், ஐபிஎல் வரலாற்றின் சிறந்த ஃபீல்டிங் தருணங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.