தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு மக்கள் அனைவரும் சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் பொங்கலை கொண்டாடும் விதமாக பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அனைத்து அரிசி பெறும் தகுதியான குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு ஆகியவற்றுடன் 3000 ரூபாய் ரொக்க பணம் பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்பட உள்ளது. இது தவிர இலவச வேட்டி சேலையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னையில் தொடங்கி வைத்துள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பொதுமக்கள் தங்களுக்கு டோக்கனில் குறிப்பிட்ட நேரத்தில் சென்று பொங்கல் பரிசு பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் பொங்கல் தொகுப்பில் தரம் குறைபாடு மற்றும் ரேஷன் பொருட்கள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால் 1967 மற்றும் 18004255901 என்ற எண்களில் புகார் அளிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. மேலும் www.tnpds.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் புகார் பதிவு செய்யலாம் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…
உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…