ஈராக்கின் மைசான் மாகாணத்திலிருந்து ஏவப்பட்ட ட்ரோன் தாக்குதல் காரணமாக, சவுதி அரேபியா தனது மிக முக்கியமான 1,200 கி.மீ நீளமுள்ள கிழக்கு-மேற்கு எண்ணெய் குழாயை மூடியுள்ளது. உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தில் 4-5% பங்கைக் கொண்ட இந்த பைப்லைன், ஹார்முஸ் ஜலசந்திப் பிரச்சினையைத் தவிர்த்து கச்சா எண்ணெய்யை விநியோகிக்கப் பயன்பட்டு வந்தது. இத்தாக்குதலால் சிலருக்குக் காயங்களும், சிறிய அளவிலான பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளதாக சவுதி வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
தனது நாட்டின் எல்லையைப் பயன்படுத்தி அண்டை நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை ஒப்புக்கொண்ட ஈராக் பிரதமர், சம்பந்தப்பட்ட மாகாணத்தின் ராணுவ கமாண்டரைப் பதவியிலிருந்து நீக்கி தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த நடவடிக்கையை சவுதி பாராட்டியுள்ளபோதிலும், தனது குடிமக்களைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க உரிமை உள்ளதாகத் தெரிவித்துள்ளது. அதேசமயம், இத்தாக்குதலுக்கு சவுதி உடனடியாக ராணுவ ரீதியிலான எந்தப் பதிலடியையும் கொடுக்கவில்லை.
இந்த பைப்லைன் மூடப்பட்ட சூழலில், ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் மற்றும் பாப் அல்-மந்தேப் ஜலசந்திப் பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருப்பதாக அறிவித்துள்ளனர். இந்த இரு சம்பவங்களால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் நெருக்கடி ஏற்பட்டு, ஜூலைக்குப் பிறகு முதன்முறையாக பேரல் ஒன்றுக்கு 100 டாலரைத் தாண்டியுள்ளது. இதனால் இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை மேலும் உயரக்கூடும் என்ற அச்சம் உருவாகியுள்ளது.
தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தின் பஞ்சகுட்டா பகுதியில், அரசுப் பேருந்து மோதி ஹேமதுர்கா என்ற 26 வயது இளம்பெண் உயிரிழந்த சம்பவத்தில்…
டெல்லியைச் சேர்ந்த மோகன் குமார் - காஜல் தம்பதியினர், தங்கள் 9 மாத ஆண் குழந்தையுடன் சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயிலில்…
மகாராஷ்டிர மாநிலம் புனேயில் பம்பாசி-சின்ச்வாட் பகுதியில் போக்குவரத்து போலிஸார் நடத்திய தீவிர வாகனச் சோதனையின் போது, போலி 'எம்.எல்.ஏ' ஸ்டிக்கர்களை…
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, ஹைதராபாத்தின் பேகம்பஜார் ஃபீல்ட் கானாவில் நிறுவப்பட்டுள்ள 48 கிலோ எடை கொண்ட தங்க விநாயகர் சிலை…
துபாயில் நடைபெற்ற மகளிர் ஆசியக் கோப்பை 2026 இறுதிப்போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சாம்பியன்…
டெல்லியில் தொழிலாளியாகப் பணிபுரியும் ஒருவரின் மனைவி, அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் காதலில் விழுந்துள்ளார். கணவர் இல்லாத நேரத்தில்…