“என் உயிருக்கு ஆபத்து!”… சிறுமிகளை பாலியல் வன்கொடுமை… ஜெம் வீரமணிக்கு எதிராக உதவியாளர் சாந்தி வெளியிட்ட பகீர் வீடியோ… இணையத்தளத்தில் பரபரப்பு…!!

By Gayathri on புரட்டாதி 24, 2026

Spread the love

தமிழகத்தில் 10-க்கும் மேற்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வீரமணி, அவரது உதவியாளர் சாந்தி மற்றும் சாந்தியின் கணவர் மகேந்திர சிம்மன் ஆகியோரை மத்திய குற்றப்புலனாய்வுப் பிரிவு காவல்துறையினர் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த நிலையில், கைதாவதற்கு முன்பாக சாந்தி பதிவு செய்த வீடியோ ஒன்று தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், வீரமணி மற்றும் அவரது மகன் சித்தார்த்தால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், தனக்கு 13 வயதாக இருந்தபோதே வீரமணி தன்னை பாலியல் ரீதியாகப் பயன்படுத்திக்கொண்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், தன்னை நம்பவைத்து தனது சொத்துக்கள் முழுவதையும் அவர் அபகரித்துக்கொண்டதாகவும் சாந்தி அந்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

   

இந்த வழக்கை மூடி மறைப்பதற்காக சுமார் 70 கோடி ரூபாய் வரை கைமாறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்தும் காவல்துறையினர் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, சாந்தி உள்ளிட்ட உதவியாளர்களின் மின்னணு சாதனங்களை ஆய்வு செய்ததில் சிறுமிகளுடன் வீரமணி இருக்கும் பல ஆதாரங்கள் சிக்கியுள்ளன. மேலும், இந்த விவகாரத்தில் தொடர்புடைய பிரகாஷ் என்பவர் வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றுள்ளதால், அவருக்கு சம்மன் அனுப்பி தேடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.