சபரிமலையில் என்ன நடக்கிறது..? பார்க்கவே கஷ்டமா இருக்கு… அண்ணாமலை வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ…!!

By Soundarya on கார்த்திகை 21, 2025

Spread the love

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாள்தோறும் லட்சக்ணக்கான பக்தர்கள் வருவதால் கூட்டம் கட்டுப்படுத்த முடியாமல் கோயில் நிர்வாகம் திணறி வருகிறது. மேலும் பக்தர் ஒருவர் கூட்டத்தில் சிக்கி மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்த நிலையில் இது குறித்து தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை  வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், நாத்திக இடதுசாரி ஜனநாயக கட்சியின் அலட்சியத்தால் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் தவிர்க்க முடியாத சிரமத்தை அனுபவித்து வருவதை பார்ப்பது உண்மையிலேயே வருத்தமாக இருக்கிறது.

இடதுசாரி ஜனநாயக கட்சியின் மோசமான நிர்வாகத்தால் நாடு முழுவதும் இருக்கும் அத்தியாய சேவை போதுமானதாக இல்லை.   சபரிமலை வரும் புனித யாத்திரை தளம் மட்டும் கிடையாது அது நம்முடைய  நாட்டில் லட்சக்கணக்கான மக்களுக்கு ஆன்மீக ஒரு மையம் . ஒரு அரசாங்கம் செய்யக்கூடியது அதன் பொறுப்பை நேர்மையோடு மரியாதையோடும் நிலை நிறுத்துவது தான் என்று குறிப்பிட்டுள்ளார்.