“மரண கிணற்றில் நரகம்”…. 20 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த பெண் ஓட்டுநர்…. வைரலாகும் பதற வைக்கும் வீடியோ….!

By Nanthini on ஐப்பசி 28, 2026

Spread the love

ஜாம்ஷெட்பூர் நகரில் உள்ள பர்மாமைன்ஸ் துர்கா பூஜை மைதானத்தில் நடைபெற்ற திருவிழாவின் போது, மரத்தாலான ‘மரண கிணறு’ சாகச நிகழ்ச்சியில் எதிர்பாராத விபத்து நிகழ்ந்துள்ளது. இந்தச் சாகசத்தின் போது பெண் ஓட்டுநரின் மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம், அரங்கத்தில் இருந்த பார்வையாளர்கள் மத்தியில் பெரும் பீதியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

வழக்கம்போல் உருளை வடிவக் கட்டமைப்பின் சுவர்களில் வாகன ஓட்டுநர்கள் அதிவேகமாகச் சுற்றிவந்தபோது, பைக்கின் எஞ்சினிலிருந்து புகை வெளியேறி சில வினாடிகளுக்குள் வாகனம் முழுமையாகத் தீப்பற்றியது. கட்டுப்பாட்டை இழந்த அந்தப் பெண் ஓட்டுநர் சுமார் 20 அடி கீழே விழுந்து தீக்காயங்களுக்கு ஆளானார். மளமளவெனப் பரவிய தீயால் அங்கு பதற்றமான சூழல் நிலவியதுடன், பாதுகாப்பு நடைமுறைகள் குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

   

அங்கிருந்த பணியாளர்கள் உடனடியாகச் செயல்பட்டு தண்ணீர் மற்றும் மண்ணைப் பயன்படுத்தி தீயை அணைத்ததால், தீ மேலும் பரவுவது தடுத்து நிறுத்தப்பட்டது. இருப்பினும், சிலர் ஆபத்தான நிலையிலும் இந்த விபட்டை செல்போனில் வீடியோ எடுப்பதிலேயே குறியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வைரல் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பலத்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

   

இந்த விபத்துக்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. விழா ஏற்பாட்டாளர்கள் இதற்கு உரிய அனுமதி பெற்றிருந்தனரா மற்றும் அங்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தனவா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. பண்டிகைக் காலங்களில் மக்கள் கூடும் இதுபோன்ற சாகச நிகழ்வுகளில் கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.