நட்பு துரோகமானதா?.. சந்தேகத்தால் விளைந்த விபரீதம்… தாய்க்காக நண்பனை தீர்த்துக்கட்டிய மகன்… போலீசார் விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்..!!!

By Rajeshwari on சித்திரை 13, 2026

Spread the love

மகாராஷ்டிர மாநிலம் ஜல்னா மாவட்டம் சிர்சாவாடி கிராமத்தில், தனது தாயுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாகச் சந்தேகித்து, 25 வயது இளைஞரை அவரது 17 வயது நண்பரே கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் உயிரிழந்த நிகில் வாக்மரே என்பவரும், பிளஸ்-2 தேர்வு எழுதி முடித்திருந்த அந்தச் சிறுவனும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். இருப்பினும், நிகில் தனது தாயுடன் அடிக்கடி அலைபேசியில் பேசி வந்ததால் ஆத்திரமடைந்த சிறுவன், நிகிலைத் தீர்த்துக்கட்டத் திட்டம் தீட்டியதாகக் கூறப்படுகிறது.

   

இதனால் சம்பவத்தன்று இரவு இருவரும் ஒன்றாக மது அருந்தியபோது, நிகில் போதையில் நிலைகுலைந்த தருணத்தைப் பயன்படுத்திக் கொண்ட அச்சிறுவன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் நிகிலின் கழுத்தை அறுத்து மிகக் கொடூரமாகக் கொலை செய்துள்ளான். இதுகுறித்துத் தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

   

இந்நிலையில் தப்பியோட முயன்ற சிறுவனைக் கைது செய்துள்ள போலீசார், இச்சம்பவம் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இக்கொடூரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.