ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை…? பின்னணியில் இருக்கும் ரகசியம் என்ன..? ஆனந்த் சீனிவாசன் கொடுத்த ஷாக் தகவல்…!

By Swetha on ஆடி 4, 2026

Spread the love

அமெரிக்க பெடரல் வங்கியின் பணவீக்கம் மற்றும் வட்டி விகிதம் குறித்த அறிவிப்புகளால், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை திடீரென 2,493 டாலர் வரை உயர்ந்தது. இதன் தாக்கத்தால், தமிழகத்திலும் கடந்த சில நாட்களாக சரிந்து வந்த தங்கம் விலை ஜூலை 01 முதல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஜூன் 30 அன்று கிராமிற்கு ரூ. 13,200 ஆக இருந்த 22 கேரட் தங்கம், தற்போது ரூ. 13,700 ஆக உயர்ந்து சவரனுக்கு ரூ. 150 வரை அதிகரித்துள்ளது.

இந்த விலை மாற்றம் குறித்துப் பேசியுள்ள பிரபல பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன், தங்கத்தின் விலையில் காணப்படும் இந்த ஏற்ற இறக்கங்கள் அடுத்த 8 மாதங்களுக்குத் தொடர்ந்து நீடிக்கும் என்று கணித்துள்ளார். அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி மீண்டும் வட்டி விகிதத்தை ஏற்றிவிடுமோ என்ற பயம் அடுத்த 8 மாதங்களுக்கு உலகளாவிய சந்தையில் நிலவும் என்பதே இதற்கு முக்கியக் காரணமாகும்.

   

இந்த உலகளாவிய பயத்தின் காரணமாக, தங்கம் சந்தையில் இப்போதைக்கு ஒரு நிலையான பெரும் உயர்வை நோக்கிச் செல்ல முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில், சந்தை எவ்வளவு தூரம் கீழே விழும் என்பதையும் நம்மால் துல்லியமாகக் கணிக்க முடியாது என்பதால், அடுத்த 8 மாதங்களுக்கு தங்கம் விலையில் ஒரு நிலையற்ற தன்மையே நீடிக்கும் என ஆனந்த் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.