“சாவுக்கும் சண்டைக்கும் அஞ்சாதவன்…” பழிக்குப்பழி பேனர்கள்.. மிரட்டும் ரவுடியிசம்…! அம்பத்தூர் கொலை வழக்கில் வெளியான பகீர் தகவல்கள்…!!

By Devi Ramu on பங்குனி 11, 2026

Spread the love

சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த இலியா சாமுவேல் (21), ஏற்கனவே ஒரு கொலை வழக்கில் தொடர்புடையவர். சிறையிலிருந்து ஜாமினில் வெளிவந்த பிறகு, அப்பகுதியில் ரவுடியிசம் செய்து வந்த அவர், சில இளைஞர்களைத் தாக்கிவிட்டு சமூக வலைதளத்தில் “சாவுக்கும் சண்டைக்கும் அஞ்சாதவன்” என்று பதிவிட்டிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்ட இளைஞர்கள் மூவர், அவரைப் பழிவாங்கத் திட்டமிட்டு பட்டாக்கத்திகளுடன் சுற்றி வளைத்தனர். உயிர் தப்பிக்க ஓடிய சாமுவேலை விடாமல் துரத்திச் சென்று, பொதுமக்கள் முன்னிலையில் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தனர்.

சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சாமுவேலின் இறுதிச்சடங்கின்போது, அவரது ஆதரவாளர்கள் வைத்த பேனரில் “நம்ப வைத்து கழுத்தறுக்கும் காலம்” போன்ற சர்ச்சைக்குரிய வசனங்கள் இடம்பெற்றிருந்தது அப்பகுதி மக்களிடையே மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாகப் பெரியசாமி, பரத் மற்றும் சந்தோஷ் ஆகிய மூவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ச்சியாக இதுபோன்ற மோதல்கள் நடப்பதைத் தவிர்க்க, ஆவடி மாநகர காவல்துறை உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.