பெட்ரூமில் ரகசிய கேமரா… டிவி-யில் நேரலை! தோழி சாந்தி அளித்த வாக்குமூலத்தால் உறைந்த போலீஸ்…. ஜெம் வீரமணி வழக்கின் பின்னணியில் வெளியான பகீர் உண்மை…!

By Nanthini on புரட்டாதி 28, 2026

Spread the love

ஜெம் வீரமணி போக்சோ வழக்கில் நாளுக்கு நாள் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான வீரமணியின் தோழி சாந்தி, தனது கணவர் மகேந்திர சிம்ஹனுடன் சேர்ந்து வீரமணியை மிரட்டி பணம் பறித்ததை காவல்துறை விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார். வீரமணியின் படுக்கையறையில் ரகசிய கேமராக்களைப் பொருத்தி, சிறுமிகள் சீரழிக்கப்படுவதை இவர்கள் இருவரும் தொடர்ந்து பதிவு செய்துள்ளனர். அதுமட்டுமின்றி, அந்த கொடூரமான வீடியோ பதிவுகளைத் தங்களது வீட்டுத் தொலைக்காட்சியில் திரையிட்டு பார்த்து ரசித்ததாகவும் சாந்தி வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த ரகசிய வீடியோ ஆதாரங்களை வைத்தே வீரமணியை தங்களது முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து இவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த மிரட்டலின் மூலம், கிழக்குக் கடற்கரைச் சாலையில் வீரமணிக்குச் சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தைக் கட்டாயப்படுத்தி விற்க வைத்து, அதிலிருந்து கிடைத்த பெருந்தொகையைப் பறித்துள்ளனர். சிறுமிகள் மீதான பாலியல் அத்துமீறல் மட்டுமின்றி, இந்த வழக்கில் பின்னப்பட்டிருந்த பிரம்மாண்ட நிதிப் மோசடி மற்றும் பிளாக்மெயில் பின்னணியும் தற்போது காவல்துறையின் தீவிர விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.