பாகிஸ்தானின் புதிய ஏவுகணைத் திட்டம் அமெரிக்காவிற்கே ஆப்பா?… தெற்காசியாவில் வெடிக்கக் காத்திருக்கும் பேரழிவு… எல்லையில் மீண்டும் பதற்றம்..!!!

By Rajeshwari on பங்குனி 19, 2026

Spread the love

அமெரிக்க உளவுத்துறை சமீபத்தில் சமர்ப்பித்துள்ள 34 பக்கங்கள் கொண்ட விரிவான அறிக்கையில், தெற்காசியப் பிராந்தியத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான மோதல் போக்கு ஒரு கட்டத்தில் அணு ஆயுதப் போராக வெடிக்க வாய்ப்புள்ளதாகப் பகீர் எச்சரிக்கை விடுத்துள்ளது. காஷ்மீரின் பகல்காம் போன்ற பகுதிகளில் நிகழும் எல்லைத் தாண்டிய பயங்கரவாதச் செயல்களும், இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து நீடிக்கும் பகைமையும் இத்தகைய ஆபத்தான சூழலுக்கு முக்கியக் காரணமாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் முன்னதாக நிலவிய உச்சக்கட்ட அணு ஆயுதப் பதற்றத்தை அமெரிக்காவின் நேரடித் தலையீடு தடுத்து நிறுத்திய போதிலும், பயங்கரவாத அமைப்புகளின் செயல்பாடுகளால் மீண்டும் ஒரு போர்ச் சூழல் உருவாகும் அச்சுறுத்தல் நீடிப்பதாக அந்த அறிக்கை கவலை தெரிவிக்கிறது. இந்த அறிக்கையின் மற்றொரு முக்கிய அம்சமாக, பாகிஸ்தான் தனது ஏவுகணைத் தொழில்நுட்பத்தை அதிவேகமாக மேம்படுத்தி வருவது குறிப்பிடப்பட்டுள்ளது.

   

இது குறிப்பாக, பாகிஸ்தான் உருவாக்கி வரும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் எதிர்காலத்தில் இந்தியாவிற்கு மட்டுமல்லாமல், அமெரிக்காவிற்கே நேரடி அச்சுறுத்தலாக அமையக்கூடும் என உளவுத்துறை எச்சரித்துள்ளது. இரு நாடுகளின் ராணுவ பலம் மற்றும் குறையாத பகைமை உணர்வு, தெற்காசியப் பிராந்தியத்தின் அமைதிக்கு ஒரு நிரந்தரச் சவாலாகவே இருக்கும் என்றும், இது உலகளாவிய பாதுகாப்பு விவகாரங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் இந்த அறிக்கையின் வாயிலாகத் தெரியவருகிறது.