ஐயோ… பாஜக பெண் கவுன்சிலருக்கு உணவில் மயக்க மருந்து கலந்த விபரீதம்… தங்க நகைகளைச் சுருட்டிக்கொண்டு நைஸாக தப்பிய பணிப்பெண்… நடுங்கவைக்கும் CCTV வீடியோ….!

By Swetha on புரட்டாதி 30, 2026

Spread the love

டெக்ராடூன் நகரில் பாஜ.க மகளிர் மன்ற கவுன்சிலர் அமிதா சிங் என்பவரின் வீட்டில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அவரது வீட்டில் பணியாற்றி வந்த வீட்டுப் பணிப்பெண், உணவுடன் மயக்க மருந்து கலந்துக் கொடுத்து அவரை மயக்கமடையச் செய்துள்ளார். பின்னர் வீட்டில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் விலைமதிப்பற்ற பொருட்களைத் திருடிக் கொண்டு அப்பெண் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

மயக்கமடைந்த நிலையில் காணப்பட்ட அமிதா சிங்கை, அவரது குடும்பத்தினரும் அக்கம் பக்கத்தினரும் உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனைகளை மேற்கொண்டனர்.

   

https://twitter.com/AjitSinghRathi/status/2105194982638604448/video/1

   

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், தப்பியோடிய பணிப்பெண்ணைப் பிடிக்க தீவிர விசாரணை மற்றும் தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர். வீட்டின் அருகில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வரும் போலீசார், தலைமறைவான பணிப்பெண்ணின் விவரங்களைச் சேகரித்து அவரை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.