ஐயோ… வண்டிய பார்த்து ஓட்டுங்க சார்… விபத்து போல் நடித்து… ரூ 22 லட்சத்தை தூக்கிச் சென்ற பயங்கரம்… இரவில் நடந்த பகீர் கொள்ளை…!

By Swetha on புரட்டாதி 27, 2026

Spread the love

சென்னை தாம்பரம் பகுதியில் உள்ள தனியார் மருந்து நிறுவன ஊழியரான அகஸ்டின் அந்தோணி என்பவர், நேற்று இரவு சுமார் 10 மணியளவில் நிறுவனத்தின் வசூல் தொகையான ரூ. 22 லட்சத்தை ஒரு பையில் எடுத்துக்கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் அடையாறு நோக்கி சென்று கொண்டிருந்தார். அடையாறு சிக்னல் அருகே அவர் சென்று கொண்டிருந்தபோது, மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அவரது வாகனத்தின் மீது மோதி திட்டமிட்டு விபத்தை ஏற்படுத்தினர். இதில் நிலைதடுமாறிய அகஸ்டின் அந்தோணியின் கவனத்தை திசைதிருப்பி, அவரிடம் இருந்த ரூ. 22 லட்சம் பணப்பையைப் பறித்துக்கொண்டு அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இச்சம்பவம் குறித்து அகஸ்டின் அந்தோணி அளித்த புகாரின் பேரில் அடையாறு காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், இவ்வளவு பெரிய தொகை எங்கிருந்து வசூல் செய்யப்பட்டது, பணம் கொண்டு செல்லப்படும் தகவல் கொள்ளையர்களுக்கு முன்கூட்டியே எவ்வாறு கிடைத்தது மற்றும் இதன் பின்னணியில் உள்ள நபர்கள் யார் என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

   

கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களைப் பிடிக்க, அடையாறு சிக்னல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் காவல்துறையினர் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், குற்றவாளிகள் தப்பிச் செல்லப் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை அடிப்படையாகக் கொண்டும் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் திட்டமிட்டு விபத்தை ஏற்படுத்தி ரூ. 22 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.