திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த கரட்டாம்பட்டி பகுதியில் உள்ள ஒரு பாலத்தின் கீழ், கடந்த செப்டம்பர் 25ஆம் தேதியன்று அழுகிய நிலையில் ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில், புலிவலம் காவல்துறையினர் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். அதில், உயிரிழந்தவர் கீரம்பூரைச் சேர்ந்த மனோகர் என்பவரின் மகள் சுகன்யா என்பது உறுதியானது. கணவரைப் பிரிந்து குழந்தையுடன் வாழ்ந்து வந்த இவர், காளிப்பட்டியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வந்துள்ளார். மேலும், தன்னிடம் உள்ள பணத்தை நெருங்கிய தோழர்கள் மற்றும் உறவினர்களுக்குக் கடனாகக் கொடுக்கும் பழக்கத்தையும் அவர் கொண்டிருந்தார்.
சம்பவத்தன்று, கண்ணனூர் அருகே வசிக்கும் தனது தோழியான சத்யா என்பவரிடம் கொடுத்த கடனைத் திரும்பப் பெறுவதற்காகச் சுகன்யா சென்றுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. காவல்துறையினரின் தீவிர விசாரணையில், பணத்தைத் திருப்பிச் கேட்டபோது அங்கு ஏற்பட்ட தகராறில் சத்யா, அவரது கணவர் துரைராஜ், மகன் விஜய் மற்றும் உறவினர்கள் இருவர் என அனைவரும் சேர்ந்து சுகன்யாவைக் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்தது அம்பலமானது. இந்தக் குற்றத்தை மறைக்க, சடலத்தை இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்று பாலத்தின் அடியில் வீசியதோடு, சுகன்யாவின் வாகனத்தைக் காளிப்பட்டி பேருந்து நிலையத்தில் நிறுத்திவிட்டு அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாகக் குற்றவாளிகளான துரைராஜ், சத்யா, விஜய் மற்றும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த சேலம் மாவட்டம் முட்டல் கிராமத்தைச் சேர்ந்த உறவினர்களான சக்திவேல், அவரது மனைவி செல்வி ஆகிய ஐந்து பேரையும் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர். பின்னர், அவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்ட கல்லூரி ஆசிரியை, கடனாளிகளாலேயே கூட்டுச் சேர்ந்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் துறையூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…