என் பொண்ணு சாவுக்கு அவன்தான் காரணம்… போனில் பேசியது மகள் அல்ல காதலன்… மாணவி மரணத்தில் வெளியான அதிர்ச்சி… தெலங்கானாவை உலுக்கிய பகீர் சம்பவம்…!

By Swetha on புரட்டாதி 24, 2026

Spread the love

தெலங்கானாவைச் சேர்ந்த 20 வயதான பொறியியல் மாணவி தந்திரா அக்ஷிதாராணி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதாகக் கருதப்பட்ட வழக்கு, அதிர்ச்சியூட்டும் கொலை வழக்காக மாறியுள்ளது. தனது டிப்ளமோ படிப்பின் போது தன்னுடன் பழகிய பகுதிநேர விரிவுரையாளர் நவீன் குமாரை விட்டு விலகி, ஐதராபாத்தில் எஞ்சினியரிங் சேர்ந்த பிறகு ரவி குமார் என்பவருடன் அவர் பழகத் தொடங்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நவீன் குமார், அக்ஷிதாராணி தன் வழியிலிருந்து விலகுவதையும் வேறு ஒருவருடன் பழகுவதையும் பொறுத்துக்கொள்ள முடியாமல் அவர் மீது வன்மத்தை வளர்த்துக் கொண்டுள்ளார்.

செப்டம்பர் 12 அன்று அக்ஷிதாராணியை காரில் கடத்திச் சென்ற நவீன் குமார், அவரை மிரட்டி ரவி குமார் மீது பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டு சுமத்தி ஒரு கடிதத்தை எழுத வைத்துள்ளார். பின்னர், அவரை வலுக்கட்டாயமாக பூச்சிக்கொல்லி மருந்தைக் குடிக்க வைத்து, மருத்துவ உதவி கிடைக்காதவாறு தாமதப்படுத்தியுள்ளார். அக்ஷிதாராணியின் தொலைபேசியைப் பயன்படுத்தி அவருடைய தந்தையைத் தொடர்புகொண்டு, இது ஒரு தற்கொலை நிகழ்வு என குடும்பத்தினரை நம்ப வைக்க முயற்சித்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அக்ஷிதாராணி மறுநாள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

   

தொழில்நுட்ப ஆதாரங்கள், சிசிடிவி காட்சிகள் மற்றும் தொலைபேசி அழைப்புப் பதிவுகளை ஆய்வு செய்த காவல்துறையினர், இது திட்டமிடப்பட்ட கொலை என்பதை அம்பலப்படுத்தினர். இச்சம்பவம் தொடர்பாக முக்கிய குற்றவாளியான நவீன் குமார் மற்றும் ரவி குமார் ஆகிய இருவரையும் செப்டம்பர் 20 அன்று காவல்துறையினர் கைது செய்தனர். அதேவேளையில், ரவி குமார் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து தனியாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அவர் நிரபராதி என அவரது மனைவி தெரிவித்துள்ளார்.