சென்னை எஸ். கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரி என்பவருக்கும், செங்கல்பட்டைச் சேர்ந்த ஜானகிராமன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தின் போது பெண் வீட்டார் தரப்பில் பெருமளவு தங்க நகைகள் வரதட்சணையாக வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தாய் வீட்டிற்கு வந்திருந்த புவனேஸ்வரி, குடும்பத்தினர் அனைவரும் கோயில் திருவிழாவிற்குச் சென்றிருந்த நேரத்தில் வீட்டின் படுக்கையறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால், அதை உடைத்து உள்ளே சென்று பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த பள்ளிக்கரணை போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காகத் தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த தற்கொலைக்கான காரணம் குறித்துப் பேசிய புவனேஸ்வரியின் தாய், தனது மகளை கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்ந்து கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகக் குற்றம் சாட்டினார். திருமணத்திற்குப் பிறகு 200 சவரன் நகை கேட்டுத் துன்புறுத்தியது மட்டுமின்றி, சமீபத்தில் நடந்த அவர்களது குழந்தையின் முதல் பிறந்தநாளுக்கு 20 சவரன் நகை கேட்டுள்ளனர். ஆனால், தாய் வீட்டில் 2 சவரன் மட்டுமே போடப்பட்டதால், கணவன் – மனைவி இருவருக்கும் இடையே மிகப்பெரிய அளவில் வாக்குவாதம் மற்றும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாகவே புவனேஸ்வரியை அவரது கணவர் தாய் வீட்டில் கொண்டு வந்து விட்டுச் சென்றுள்ளார்.
தாய் வீட்டில் இருந்த புவனேஸ்வரியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய அவரது கணவர், இனிமேல் தன் வீட்டிற்குத் திரும்ப வர வேண்டாம் எனக் கூறியதாகத் தெரிகிறது. கல்வியில் சிறந்து விளங்கி ஆசிரியராகவும் பணியாற்றிய அவர், கணவரின் இந்த வார்த்தைகளால் ஏற்பட்ட கடுமையான மன உளைச்சலாலேயே தற்கொலை செய்துகொண்டுள்ளார் என உறவினர்கள் வேதனை தெரிவித்தனர். திருமணமாகி குறுகிய காலமே ஆவதால், இந்த வழக்கானது கிண்டி வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. தங்கள் மகளைக் கொடுமைப்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து நியாயம் வழங்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளனர்.
சமூக வலைதளங்களில் லைக், ஷேர் மற்றும் ஃபாலோயர்ஸ்களைப் பெறுவதற்காக, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புனிதமான லட்டு பிரசாதத்தைப் பயன்படுத்துவதாக எழுந்த…
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே பள்ளிவிடையில் இயங்கி வரும் அரசு உதவிபெறும் உயர்நிலைப் பள்ளியில், தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வந்த…
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ராமபையனூர் அரசு நடுநிலைப்பள்ளியில், மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவுத் திட்டச் சாம்பாரில், அதே ஊரைச் சேர்ந்த…
தேசிய அரசியலில் அடுத்த பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்த விவாதம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. சமீபத்தில் வெளியான முன்னணி கருத்துக்கணிப்பு…
சென்னை கூடுவாஞ்சேரியில் அரங்கேறியுள்ள கொடூரக் கொலை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹயாதுன் நிஷா (38) என்ற…
தமிழகத்தில் பல தசாப்தகால திராவிடக் கட்சி ஆதிக்கத்தை உடைத்து, எந்தக் கூட்டணியும் இன்றித் தனித்துப் போட்டியிட்டு 35 சதவீத வாக்குகளுடன்…