“சீட் வேணுமா? 1 கோடி கொடுங்க!” தவெக நேர்காணலில் அதிரடி நிபந்தனை..? அதிர்ச்சியில் வேட்பாளர்கள்..!!

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் நேர்காணல்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், எதிர்பாராத சில சலசலப்புகள் அக்கட்சிக்குள் எழுந்துள்ளன. தேர்தலில் போட்டியிட ஆர்வத்துடன் விருப்பமனு அளித்தவர்கள், தற்போது களமிறங்குவதற்குத் தயக்கம் காட்டுவதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. கட்சித் தலைமையுடன் நடைபெறும் நேர்காணலின் போது முன்வைக்கப்படும் சில நிபந்தனைகளே இந்தத் தயக்கத்திற்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

குறிப்பாக, வேட்பாளர் சீட் ஒதுக்கீட்டிற்காக முன்கூட்டியே ரூ. 1 கோடி வரை நிதியுதவி கோரப்படுவதாகவும், தேர்தல் செலவுகளுக்காகக் கூடுதலாக ரூ. 2 கோடி வரை செலவு செய்ய முடியுமா என வேட்பாளர்களிடம் உறுதிமொழி பெறப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தத் திடீர் நிதி நெருக்கடி, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மற்றும் சாதாரணத் தொண்டர்களாக இருந்து விருப்பமனு அளித்தவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிதி நிலைப்பாட்டினால் அதிருப்தியடைந்துள்ள விருப்பமனு தாரர்கள், “ஏதேனும் ஒரு பெரிய கட்சியுடன் கூட்டணி அமைத்திருந்தால் பலம் கூடியிருக்கும், அப்போது கடன் பெற்றாவது தேர்தல் செலவுகளைச் சமாளித்திருப்போம்; ஆனால் இப்போது தனித்துக் களம் காணும் நிலையில், எந்த நம்பிக்கையில் இவ்வளவு பெரிய தொகையைச் செலவிடுவது?” எனப் புலம்பி வருவதாகத் தெரிகிறது. தவெக-வின் இந்தத் தேர்தல் வியூகம் மற்றும் நிதி சார்ந்த அணுகுமுறை, தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Soundarya

Recent Posts

“மத்திய அமைச்சர் பதவி கொடுத்தா அதிமுகவை பாஜகவிடம் விற்றுவிடுவார்”.. எடப்பாடியை அசிங்கப்படுத்திய தவெக நிர்மல் குமார்..!!

அதிமுக தலைமையின் மீதான கடுமையான நம்பிக்கையின்மையால் தான், அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் தற்போது தங்களை மாற்றிக்கொண்டு தானாகவே தவெகவில் இணைந்து வருவதாக…

11 minutes ago

“டெல்லியை உலுக்கும் மெகா புரட்சி.. ‘காக்கரோச் ஜனதா கட்சி’ போராட்டத்தில் குதித்த AISA மற்றும் SFI மாணவ இயக்கங்கள்.. மத்திய அரசுக்கு புதிய நெருக்கடி”..!

நீட் (NEET-UG 2026) வினாத்தாள் கசிவு மற்றும் சிபிஎஸ்இ (CBSE) தேர்வு குளறுபடிகளுக்கு எதிராக, நாட்டின் கல்வித்துறையையும் லட்சக்கணக்கான மாணவர்களின்…

32 minutes ago

“சச்சினின் 36 ஆண்டுகால அசுர சாதனை அவுட்.. இந்திய கிரிக்கெட்டை ஆள வந்த 15 வயது சிறுவன் வைபவ் சூர்யவன்ஷி.. பிசிசிஐ-யின் அன்லிமிடெட் அதிரடி பிளான்..!!

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு மாபெரும் வரலாற்றுச் சாதனை இன்று நிகழ்த்தப்பட்டுள்ளது. அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து…

42 minutes ago

“ரயில்வே சாப்பாட்டுல இனிமேல் இந்த தப்பு நடக்காது.. ஏஐ தொழில்நுட்பத்தின் மாஸ் என்ட்ரி.. ஐஆர்சிடிசி-யின் அதிரடி ஆக்ஷன்”..!!

ரயில் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் சுகாதாரத்தை 100 சதவீதம் உறுதி செய்யும் நோக்கில், இந்திய ரயில்வே உணவு…

56 minutes ago

முதியவர்களுக்கே இந்த நிலையா..? வீட்டிற்குள் புகுந்து 60 வயது.. மூதாட்டிக்கு பாலியல் துன்புறுத்தல்.. மீண்டும் அதிகாலையில் வந்து அத்துமீறல்… கள்ளக்குறிச்சியில் பரபரப்பு…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் வடபொண்பரப்பி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், வீட்டில் தனியாக உறங்கிக் கொண்டிருந்த 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவரிடம்…

1 மணத்தியாலம் ago

“அன்று விஜய்யை 3 மணி நேரம் அலையவிட்ட அமைச்சர்!.. இன்று தவெக வாசலில் மணிக்கணக்கில் காத்திருந்த கொடூரம்.. காலம் கொடுத்த மரண அடி”..!!

தமிழக அரசியலில் இன்று ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அதிரடித் திருப்புமுனை நிகழ்ந்துள்ளது. ஒருகாலத்தில் தமிழகத்தின் அசுர பலம் வாய்ந்த…

1 மணத்தியாலம் ago