காது அறுக்கப்பட்டு, நிர்வாண நிலையில் கழிவு நீர் தொட்டியில் மிதந்த பெண்ணின் உடல்… பட்டப் பகலில் நடந்த பயங்கரம்…!

By Nanthini on ஆவணி 26, 2025

Spread the love

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத வீட்டின் கழிவு நீர் தொட்டியில் இருந்து நடுத்தர வயது பெண் ஒருவர் நிர்வாண நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எர்ணாகுளம் மாவட்டத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத வீட்டின் கழிவு நீர் தொட்டியில் பெண்ணின் சடலம் ஒன்று கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் கழிவு நீர் தொட்டிக்குள் நிர்வாண நிலையில் இருந்த பெண் சடலத்தை மீட்டனர். பிறகு சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்த காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரேத பரிசோதனை அறிக்கையில் அந்தப் பெண் பின் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அந்த பெண்ணின் காது அறுக்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது அந்த பெண்ணை தாக்கி கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த நகைகளை யாரோ ஒருவர் திருடி சென்று இருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவிக்கின்றன. இந்த கொலை சம்பவத்தில் ராஜேஷ் என்ற நபர் ஈடுபட்டிருக்கலாம் என்று காவல்துறையினருக்கு தகவல் கிடைத்த நிலையில் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.