Connect with us

வீரப்பன் பிடியில் இருந்த 108 நாட்கள்.. முதன் முறையாக தனது தந்தையும் நடிகருமான ராஜ்குமார் பற்றி மனம் திறந்த ‘ஜெயிலர்’ பட நடிகர்..

CINEMA

வீரப்பன் பிடியில் இருந்த 108 நாட்கள்.. முதன் முறையாக தனது தந்தையும் நடிகருமான ராஜ்குமார் பற்றி மனம் திறந்த ‘ஜெயிலர்’ பட நடிகர்..

 

ஜெயிலர் படத்தில் சில காட்சிகளே வந்தாலும், சிவராஜ்குமார் நடிப்பு வேற லெவலில் இருந்தது. ரஜினி மாஸ் அவரிடமும் பிரதிபலித்தது. இப்போது தனுஷ் நடிப்பில் வெளியாக உள்ள கேப்டன் மில்லர் படத்திலும் சிவராஜ்குமார் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்.தொடர்ந்து தமிழில் அவருக்கு பட வாய்ப்புகள் வந்த நிலையில் உள்ளன. அடுத்து கமல் படம் ஒன்றில் சிவராஜ்குமார் நடிக்கவும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. சமீபத்திய நேர்காணல் ஒன்றில் சிவராஜ்குமார் கூறியதாவது, அப்பாவை நினைக்காத நாளே இல்லை. தினமும் இரண்டு மூன்று தடவையாவது அவரது நினைவு மனதில் வந்துவந்து போகும்.

   

வீரப்பன், அப்பாவை கடத்திய அந்த காலகடத்தில் சிவாஜிகணேசன், ரஜினி, அர்ஜூன், முரளி, அமிதாப் பச்சன், சிரஞ்சீவி என பலரும் மிகுந்த வேதனைப்பட்டனர். கவலையை வெளிப்படுத்திக் கொண்டே இருந்தனர். அவருக்கு தங்களுக்கு ஆதரவை காட்டினர். கில்லிங் வீரப்பன் என்ற ராம்கோபால் வர்மா படத்தில் நடிக்கும்போது என் அப்பாவை இப்படி கடத்திட்டு போய் கஷ்டப்படுத்திட்டியே என்ற கோபத்தை காட்டும் விதமாக, பழிவாங்கும் விதமான அந்த கேரக்டரை ராம்கோபால் வர்மாவே எனக்குள் உருவாக்கினார். அப்படி ஒரு பீலிங்கை எனக்குள் கொண்டு வந்தார். அப்படி நடிப்பது ஒரு சாடிஸ்பிகேசன் ஆக இருந்தது.

வீரப்பன் கடத்திய அப்போது அப்பாவுக்கு முழங்கால் வலி பிரச்னை இருந்தது. காட்டுக்குள் நீண்ட தூரம் தினமும் நடந்திருக்கிறார். முழுவதும் காடு, இருட்டு, எங்கு பார்த்தாலும் இருட்டு. பச்சை, ஆறுகள் ஓடும் சத்தம், மிருகங்களின் சத்தம். அவ்வப்போது கொஞ்சம் வெட்ட வெளியில் சூரிய வெளிச்சம். இப்படி 108 நாட்கள் காட்டுக்குள் வாழ்ந்திருக்கிறார், இப்படி எல்லாம் பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்த போது இங்கு எரிந்த மின்விளக்குகளை பார்த்து ஆச்சரியப்படும் அளவுக்கு அவரது மனநிலையில் மாற்றம் வந்துவிட்டது. ஆனாலும் யோகா, தியானம் போன்றவை அவரது மனதில் மாற்றத்தை கொண்டு வந்தது என்று கூறியிருக்கிறார் சிவராஜ்குமார்.

author avatar
Sumathi
Continue Reading
To Top