சிவானி நாராயணன் சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இப்போது இன்ஸ்டாகிராமில் ஷிவானிக்கு 4 மில்லியன் ஃபாலோவர்ஸ் இருக்கின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் ஷிவானி நாராயணன்.
கடந்த 2019-ஆம் ஆண்டு ஜீ தமிழில் ஒளிபரப்பான ரெட்டை ரோஜா சீரியலில் ஷிவானி நாராயணன் கதாநாயகியாக நடித்தார். இதனையடுத்து பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் சிவானி போட்டியாளராக கலந்து கொண்டு புகழ்பெற்றார். அவர் பிக்பாஸ் வீட்டில் 98 நாட்கள் இருந்தார். இதனை தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜி நடிப்பில் வெளியான வீட்டுல விசேஷம் படத்தில் சிவானி நடித்திருந்தார்.
கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படத்தின் மூலம் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஷிவானி வெள்ளி திரையில் தனது பயணத்தை ஆரம்பித்தார். இதனையடுத்து விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் மூன்றாவது மனைவியாக நடித்திருந்தார். அதன் பிறகு டிஎஸ்பி படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். பிரபல காமெடி நடிகரான வடிவேலுவுடன் இணைந்து நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் நடித்தார்.
பின்னர் பம்பர் திரைப்படத்தில் ஹீரோயின் ஆகவும் நடித்துள்ளார். அதன்பிறகு அவருக்கு அவ்வளவாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ஷிவானி நாராயணன் போட்டோ ஷூட் நடத்தி அதனை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவார். அந்த வகையில் தற்போது ஷிவானி நாராயணன் வெளியிட்ட போட்டோஸ் வேகமாக பரவி வருகிறது.