சிவாங்கி சூப்பர் சிங்கர் ஷோவில் பாடகியாக கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார். அவரது இனிமையான குரலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று மிகவும் பிரபலமானார்.
காமெடியனாக இருந்து பின்னர் குக் வித் கோமாளி போட்டியாளராகவும் வலம் வந்தார் சிவாங்கி. தான் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சிவாங்கி.
சிவாங்கியின் பெற்றோர் இசை கலைஞர்கள். இருவரும் கலைமாமணி விருது வாங்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதில் சிவாங்கியின் அம்மா சந்திரமுகி படத்தில் இடம்பெற்ற ரா ரா பாடலை பாடியிருக்கிறார். சிவாங்கி தற்போது உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் நடக்கும் இசை கச்சேரிகளிலும் கலந்து கொண்டு பாடுகிறார்.
திரைப்படங்களிலும் சிவாங்கி பாடல்களை பாடியுள்ளார். மேலும் யூட்யூப் சேனல் மூலமும் சம்பாதிக்கிறார். சிவாங்கி யூட்யூப் சேனலுக்கு 2.5 மில்லியன் ஃபாலோவர்ஸ் இருக்கின்றனர். ஒரு வீடியோ போட்டாலே அவருக்கு நல்ல வருமானம் கிடைத்து வருகிறது. சிவாங்கியின் net worth சுமார் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது.