பாடகி ஸ்ரேயா கோஷலை சந்தித்து மகிழ்ச்சியில் துள்ளி குதித்த சிவாங்கி!… ‘என் வாழ்க்கையின் மறக்க முடியாத தருணம்’!… அவரே வெளியிட்ட வைரல் வீடியோ இதோ!….

By Begam

Published on:

பாடகி சிவாங்கி இந்திய திரை உலகின் பின்னணி பாடகிகளில் ஒருவரான ஸ்ரேயா  கோஷலை சந்தித்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் சிவாங்கி. இவரின் குரலை பார்த்து கலாய்த்தவர்கள் ஏராளம். ஆனால் பாடல் என்று வந்துவிட்டால் இவருக்கு யாரும் ஈடு கொடுக்க முடியாது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் இவர் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமானார். இதைத்தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்றார்.

   

கோமாளியாக பங்கேற்று இவர் செய்த சேட்டைகள் ரசிகர்களை கவர்ந்தது. இவருக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாகியது. இதில் கிடைத்த பிரபலத்தை கொண்டு இவர் வெள்ளித்திரையிலும் கலக்கிக் கொண்டு வருகிறார். வெள்ளித்திரையில் பாடகியாக மட்டுமின்றி நடிகையாகவும் களமிறங்கி அசத்தி வருகிறார்.

நடிகர் சிவகார்த்திகேயன் உடன் ‘டான்’ திரைப்படத்திலும், நடிகர் வடிவேலுவுடன் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ திரைப்படத்திலும் என முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துக் கொண்டு வருகிறார். இந்நிலையில் சிவாங்கி இந்திய சினிமாவின் பின்னணி முக்கிய பின்னணி பாடகிகளில் ஒருவரான ஸ்ரேயா  கோஷலை சமீபத்தில் சந்தித்துள்ளார்.

இவர் பாடகி ஸ்ரேயா  கோஷலை சந்தித்த உடனே மகிழ்ச்சியில் துள்ளி குதித்து என்ன பேசுவது என்றே தெரியாமல் வாயடைத்துப் போய் உள்ளார். மேலும் இதை அவர் தனது வாழ்க்கையின் மறக்க முடியாத தருணம் என்று கூறி இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில்  அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இதோ அந்த வீடியோ…