Connect with us

அந்த பாடல் வரிகளை மறக்க முடியுமா..? கண்ணதாசனை கண்ணீர் விட்டு கட்டியணைத்த சிவாஜி..!!

CINEMA

அந்த பாடல் வரிகளை மறக்க முடியுமா..? கண்ணதாசனை கண்ணீர் விட்டு கட்டியணைத்த சிவாஜி..!!

 

பிரபல பாடலாசிரியரான கண்ணதாசன் கதாசிரியர், வசனகர்த்தா, பத்திரிகையாளர், தயாரிப்பாளர், நடிகர், பாடலாசிரியர் என பன்முக திறமைகளை கொண்டவராக இருந்தார். 1960-களில் முன்னணி நடிகர்களாக வலம் வந்த சிவாஜி, ஜெமினி கணேசன், எம்ஜிஆர், ஜெய்சங்கர், முத்துராமன் உள்ளிட்ட நடிகர்களின் திரைப்படத்திற்கு கண்ணதாசன் தான் பெரும்பாலான பாடல்களை எழுதினார்.

Sivaji VC Ganesan - God's Own Son. on X: "கவிஞர் கண்ணதாசன் அவர்களின்  பிறந்ததினம் இன்று. பிறவி கவிஞன். கண்ணதாசன் தனது படங்களுக்கு எழுதக்கூடாது  என்று ஒரே ...

   

மேலும் ஆரம்ப காலகட்டத்தில் எம்ஜிஆர் நடித்த படங்களில் அவருக்கு கதை மற்றும் வசனங்களை எழுதியுள்ளார். அந்த காலகட்டத்தில் சூழ்நிலைகளை புரிந்து கொண்டு கண்ணதாசன் போன்று பாடல் எழுத யாருமே இல்லை என்ற நிலை உருவானது. அவருக்கு பின்னால் தான் கவிஞர் வாலி வந்தார். சில சமயங்களில் கண்ணதாசனோடு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சண்டை போட்டுள்ளார்.

kannadhasan and sivaji

ஆனாலும் இருவருக்கும் இடையேயான நட்பு அனைவரும் அறிந்தது. சில மாதங்கள் தான் இருவரும் பேசாமல் இருப்பார்கள். ஆனால் அதன் பிறகு இருவரும் பேசி விடுவார்கள். கடந்த 1961-ஆம் ஆண்டு சிவாஜி கணேசன், சரோஜாதேவி நடிப்பில் பாலும் பழமும் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை ஏ.பீம்சிங் இயக்கினார்.  இந்த படத்தின் ஒரு பாடல் கம்போசிங் சிவாஜியின் அன்னை இல்லத்தில் நடைபெற்றுள்ளது.

அவனை ஒரு அடியாவது அடிக்கணும்… கண்ணதாசனை அடிக்க பாய்ந்த சிவாஜி கணேசன் -  CineReporters

இதற்காக ஒரு பாடலை எழுதிக் கொண்டு கண்ணதாசன் அங்கு சென்றார். பின்னர் ஷூட்டிங் முடித்துவிட்டு வீட்டிற்கு சென்று சிவாஜி அந்த பாடல் வரிகளை படித்துப் பார்த்துள்ளார். உடனே கண்ணதாசனை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உன்னை இப்போது பார்க்க வேண்டும் என கூறியுள்ளார். அதற்கு கண்ணதாசன் இப்போது என்ன காலையில் சந்திக்கலாம் என கூறினாராம். உடனே சிவாஜி இப்போது நீ வருகிறாயா இல்லை நான் வரட்டுமா என கேட்டுள்ளார்.

கண்ணதாசனை அடிக்கத் துரத்திய சிவாஜி!' பழைய பேப்பர் கடை | Epi 6 | Sivaji  ganesan kannadasan fight pazhaya paper kadai part 6

இதனால் கண்ணதாசன் சிவாஜியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே கண்ணதாசனின் வருகைக்காக சிவாஜி காத்துக் கொண்டிருந்தார். கண்ணதாசனை பார்த்ததும் கண்களில் கண்ணீர் வடிய அவரை கட்டியணைத்து பாராட்டியுள்ளார். அந்த பாடல் தான் என்னை யாரென்று எண்ணி நீ பார்க்கிறாய் என்ற பாடலாகும். அந்த பாடல் வரிகளை பார்த்து சிவாஜி கணேசன் வியந்துவிட்டாராம்.

Kannadassan Evergreen Songs,காலத்தால் அழியாத கண்ணதாசன் பாடல்கள்.! - top 10  evergreen songs of kannadaasan - Samayam Tamil

author avatar
Priya Ram
Continue Reading
To Top